தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை நிரந்தரப்படுத்திடுக! மதுரையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்

16 Feb 2026, 2:37 pm
நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை நிரந்தரப்படுத்திடுக! மதுரையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்

நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை நிரந்தரப்படுத்திடுக! மதுரையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்

மதுரை, பிப்.16- தமிழ்நாடு மாநில வாணிபக் கழ கம் (டாஸ்மாக்) சில்லரை மது பானக் கடைகளில் நீண்டகாலமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட 8 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேள னம் (சிஐடியு) சார்பில் மண்டல அள விலான உண்ணாவிரதப் போராட்  டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பழங்காநத்தம் ரவுண்டானா (ஜெயம் தியேட்டர் அருகில்) பகுதி யில் நடைபெற்ற இந்த போராட்டத்  தில், கடந்த 22 ஆண்டுகளாக பணி யாற்றி வரும் அனைத்து டாஸ்  மாக் கடை ஊழியர்களையும் சட்டப்  படி பணி வரன்முறைப்படுத்த வேண் டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் மூலம்  கூடுதல் வேலைப்பளு திணிப்பதை  நிறுத்த வேண்டும், நிர்வாக மருத்து வத் திட்டத்திற்கு மாற்றாக இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டம் அமல் படுத்த வேண்டும், ஓய்வு வயதை 58 இலிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும், 8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிவோருக்கு இரட் டிப்பு மிகை நேர ஊதியம் வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளும் முன்வைக்கப் பட்டன. போராட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் மாநில தலைவர் பி.முருகன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பாலசுப்பிர மணியன் தொடக்க உரையாற்றி னார். மதுரை மாநகராட்சி மேயர் (பொ) தி.நாகராஜன், சிஐடியு மாநி லச் செயலாளர் பி.என்.தேவா, மாநில துணைத் தலைவர் இரா.தெய்வராஜ், போக்குவரத்து மாநில சம்மேளன துணைச் செய லாளர் வீ.பிச்சை, மாநில செயலா ளர் ஜே.லூர்து ரூபி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் சிஐடியு மாநில செயலாளர் இரா.லெனின் நிறைவு ரையாற்றினார். டாஸ்மாக் மாவட் டச் செயலாளர் ஜி.பொன்ராஜ் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.