மருத்துவத்தை அடிப்படை உரிமை சட்டமாக நிறைவேற்ற வேண்டும்
9 Apr 2026, 5:30 am

மருத்துவத்தை அடிப்படை உரிமை சட்டமாக நிறைவேற்ற வேண்டும்

இராமநாதபுரம், ஏப்.8- இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மக்கள் அறிவியல் சாசனம் 2026 தமிழக வளர்ச்சிக்கான மருத்துவத்தை அடிப்படை உரிமைச் சட்டமாக நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய புத்தகத்தை பரமக்குடி சட்டமன்ற வேட்பாளர் கே.கே.கதிரவன் மற்றும் அதிமுக வேட்பாளர் முத்தையா ஆகியோரிடம் அறிவியல் இயக்கத்தினர் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெ.சேகர், வட்டாரச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.