தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

22 Feb 2026, 3:26 pm
விளையாட்டு

மேஜர்ஸ் லீக் கால்பந்து மெஸ்ஸியின் இன்டர் மியாமி தடுமாற்றம்

அமெரிக்காவின் முக்கிய கால்பந்து தொடரான மேஜர்ஸ் லீக் தொடரின் 31ஆவது சீசன்  இந்திய நேரப்படி ஞாயிறன்று அதிகாலை (அமெரிக்க நேரப்படி சனியன்று இரவு) தொடங்கியது. நடப்பு சாம்பியனான மெஸ்ஸியின்  இன்டர் மியாமி அணி தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் பயணத்தை தொடங்க, தொடரின் முதல் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை எதிர்கொண்டது.  இந்த போட்டியில் மெஸ்ஸி விளை யாடிய பொழுதிலும், லாஸ் ஏஞ்சல்ஸ் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி, 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று, 2025ஆம் ஆண்டின் சாம்பியன் அணியான இன்டர் மியாமிக்கு அதிர்ச்சி அளித்தது.

டி-20 உலகக்கோப்பை 2026

இன்றைய ஆட்டம்

ஜிம்பாப்வே - மேற்கு இந்தியத் தீவுகள் நேரம்: இரவு 7:00 மணி இடம்: மும்பை, மகாராஷ்டிரா சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

குளிர்கால ஒலிம்பிக் 2026 40 வயதில் ஸ்பீடு ஸ்கேட்டிங் ; நெதர்லாந்து வீரர் உலக சாதனை

25ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலி நாட்டின் மிலன், கார்டினா நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 40 வயதான நெதர்லாந்து வீரர் ஜோரிட் பெர்க்ஸ்மா மாஸ் ஸ்டார்ட் பிரிவில் தங்கம்  வென்று அசத்தினார். இதன் மூலம் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற மிக வயதான வீரர் என்ற பெருமையையும், உலக சாதனையையும் அவர் படைத்தார். மகளிருக்கான மாஸ் ஸ்டார்ட் பிரிவிலும் நெதர்லாந்தின் மாரிக் தங்கம் வென்றார். அபாயகரமான ஸ்பீடு ஸ்கேட்டிங் பிரிவில் நெதர்லாந்து நாடு ஆதிக்கம் செலுத்தி பதக்கப் பட்டியலில் மூனறாம் இடத்திற்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்கால ஒலிம்பிக் - 2026 பதக்கப் பட்டியல்

நாடுகள்        தங்கம்       வெள்ளி      வெண்கலம்      மொத்தம்

1.     நார்வே    18    11    11    40

2.    அமெரிக்கா    11    12    9    32

3.    நெதர்லாந்து    10    7    3    20

4.    இத்தாலி    10    6    14    30

5.    பிரான்ஸ்    8    9    6    23

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.