மக்காச்சோளம் விலை வீழ்ச்சி: குவிண்டாலுக்கு ரூ.4000 வழங்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
31 Jan 2026, 5:27 pm
<p><strong>மக்காச்சோளம் விலை வீழ்ச்சி: குவிண்டாலுக்கு ரூ.4000 வழங்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு</strong></p>
<p>திருப்பூர், ஜன.31- திருப்பூர் மாவட்டத்தில் மக்காச் சோளம் பயிர் அறுவடை செய்யப் பட உள்ள நிலையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு செலவை ஈடுகட்ட குவிண்டாலுக்கு ரூ.4000 வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ள னர். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரண வரே தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஆர்.மதுசூதனன் பேசுகையில்: கடந் தாண்டு மக்காச்சோளம் குவிண் டால் ரூ.2400 முதல் 2500 வரை விற் பனையானது. ஆனால் தற்போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு ரூ. 1900 முதல் 1950க்கு தான் விற்கிறது. சாகுபடி செலவு அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை. எனவே வேளாண்துறை மாவட்ட நிர்வாகம் கோழி தீவனம் மாட்டுத்தீவனம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களி டம் பேசி மக்காச்சோளம் ஒரு குவின்டால் ரூ. 4000 விலை கிடைக்க செய்ய வேண்டும். விவசாயத்திற்கு பயன்படும் பவர் ஸ்பிரேயர், எலக்ட் ரிக்கல் மருந்து தெளிப்பான், களை வெட்டும் சிறு எந்திரம் பவர் டில்லர் உட்பட்ட கருவிகளை விவசாய தொழிலாளர்கள், மலைவாழ் மக்க ளுக்கு முழுமையான மானியத்தில் வழங்க வேண்டும். உபரி நிலத்தை மீட்டுத்தர கோரிக்கை காங்கேயம், தாராபுரம் வட்டா ரத்தில் உபரி நிலம் மற்றும் பூமி தான நிலங்களை வசதி படைத்த வரிடம் இருந்து மீட்டு ஏழை எளிய மக்களுக்கு நிலம் வினியோகம் செய்ய வேண்டும். 30, 40 ஆண்டுக ளுக்கு முன்பு பட்டா பெற்றவர்கள் நிலம் கிடைக்காமல் உள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று மதுசூதனன் கேட்டுக்கொண் டார். பதில் அளித்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் பிரச்சனை இல்லாத உபரி நிலங்களை மீட்டு வீட்டு மனைப்பட்டா மற்றும் நிலம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். நார் தொழிற்சாலைக்கு தடை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மடத்துக்குளம் செயலாளர் எம் எம். வீரப்பன் பேசும்போது, அமரா வதி பிரதான கால்வாயில் நெல், கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் கால அவகாசம் அமராவதி பாசனத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு உரிய நடவ டிக்கை எடுத்து வருவதாக அதிகா ரிகள் தெரிவித்தனர். மடத்துக் குளம் தாலுகா பகுதியில் நெல் கரும்பு சாகுபடி செய்யும் வள மான விவசாயப் பகுதியில் நார் தொழிற்சாலைகள் அமைக்கப் பட்டு அதிலிருந்து கழிவு தண்ணீரை நிலத்தில் வெளியேற்றுவதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. நுண்ணுயிர் கள் அழிந்து மண்வளம் அழிகிறது என்று கூறினார். கோட்டாட்சியர் ஆய்வு செய்து ஆலைகளுக்கு தடை விதித்த போதும், அதை மீறி தொடர்ந்து நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. எனவே அந்தப் பகு தியை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீரப்பன் வலியுறுத்தினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கள் ஆய்வு செய்து உரிய வழிகாட்டு தல் வழங்கவும், மண்வளத்தை அழிக்கும் செயல்பாட்டிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆட் சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத் தினார். ரூ.25 லட்சத்தை மீட்டுத்தர கோரிக்கை பட்டுக் கூடு உற்பத்தி விவசாயி கள் சங்க நிர்வாகி செல்வராஜ் கூறி யதாவது, பட்டுக்கூடு விவசாயிகள் தொடர் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் அவர்களுக்கு நிலு வைப் பணம் ரூ. 25 லட்சம் வர வேண்டியுள்ளது. அதை தனியார் நிறுவனத்தில் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று கூறினார். சம் பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தி டம் நோட்டீஸ் அளித்து பட்டுக்கூடு விவசாயிகளுக்கு பணத்தை பெற் றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உடுமலை வட்டாட்சிய ருக்கு அறிவுறுத்தினார். விவசாயி கள் பழக்கழிவுகள் காய்கறி கழிவு களை விற்பனை கடைகளில் இருந்து தோட்டங்களுக்கு கொண்டு சென்று உரமாக பயன்படுத்த உரிய அனு மதி வழங்க வேண்டும் என்றும் செல்வராஜ் கேட்டுக்கொண்டார். விவசாயிகள் வெளிநடப்பு முன்னதாக, தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்கத்தினர், கறிக் கோழி பிரச்சனையில் அறவழியில் போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, பொங்கல் பண்டிகை சமயத்தில் கைது செய்து சிறை வைத்த காவல் துறையையும் அரசு நிர்வாகத்தையும் கண்டித்து கூட்டம் தொடங்கியவுடன் கண்க ளில் கருப்பு துணிகளை கட்டிக் கொண்டு வெளிநடப்பு செய்தனர்.</p>
