முந்தய பக்கம்

மக்காச்சோள பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்! விவசாயிகள் கவலை

25 Nov 2025, 3:29 pm
மக்காச்சோள பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்! விவசாயிகள் கவலை
<p><strong>மக்காச்சோள பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்! விவசாயிகள் கவலை</strong></p> <p>கடலூர், நவ.25 - வேப்பூர் அருகே நீரில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்துள்ள மக்காச்சோள பயிர்க ளால் &nbsp;விவசாயிகள் கவலை அடைந்துள்ள னர். கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அடரி கிராம பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் பெய்த மழையில் மக்காச்சோள வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற வழி இல்லாததால் பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்தது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் இதனால் சோகத்தில் ஆழ்ந்தனர். &nbsp;அப்பகுதியில் இருந்த வடிகால் வாய்கால்களை ஆக்கிரமித்துள்ள தாலேயே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ள தாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். அதனை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென &nbsp;அதிகாரிகளிடம் &nbsp;கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிவிக்கும் விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram