பிஏபி தொகுப்பு அணைக்கு தண்ணீர் வரும் காண்டூர் கால்வாய் பராமரிக்கும் பணி
29 Dec 2025, 6:22 pm
<p><strong>பிஏபி தொகுப்பு அணைக்கு தண்ணீர் வரும் காண்டூர் கால்வாய் பராமரிக்கும் பணி</strong></p>
<p>உடுமலை,டிச.29- பிஏபி முதலாம் மண்டல பாசனத்திற்கு ஜன.24 ஆம் தேதி தண்ணீர் திறக்கும் வகையில், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வரும் காண்டூர் கால்வாய் பராம ரிப்புப் பணி திருமூர்த்தி அணையில் இருந்து வேக மாக நடைபெற்று வருகி றது. கோவை மற்றும் திருப் பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 4.25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கும் – பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் பூமி மட்டத்தில் இருந்து பல நூறு மீட்டர் உயரமான மலை முகடுகளுக்கிடையே கட்டப்பட்டுள்ள ஆறு அணைகளில் இருந்து, பூமி மட்டத்தில் உள்ள திருமூர்த்தி மற்றும் ஆழியாறு அணை களுக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இத்திட்டத்தின் இதயமாக இருக்கும் 49.3 கி.மீ நீளமுள்ள, மலைமேல் அமைந்துள்ள காண் டூர் சம மட்டக் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாயில் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் தண்ணீர் நிறுத்தப்பட்டு மிகவும் பழுதடைந் துள்ள 10.700 கி.மீ. முதல் 11.100 கி.மீ. வரை யும், 12.560 கி.மீ. முதல் 12.760 கி.மீ வரையும் மேலும் நீரார் சுரங்கம் நுழைவுப் பகுதியில் உள்ள அவசர கால தண்ணீர் திறப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள மதகு பகுதியில் நடை பெறும் வேலைகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.16.9 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நீர்வ ளத்துறை அலுவலர்கள் கண்காணித்து வரு கின்றனர்.</p>
