நீர்ப்பாசனத் திட்டத்தில் பராமரிப்பு தீவிரம்
21 Jan 2026, 3:58 pm
<p><strong>நீர்ப்பாசனத் திட்டத்தில் பராமரிப்பு தீவிரம்</strong></p>
<p>உடுமலை, ஜன.21- பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத் தின் முதல் மண்டல பகுதிக்கு வரும் ஜனவரி 24 ஆம் தேதி முதல் தண்ணீர் விடத் திட்டமி டப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு கள் மற்றும் பராமரிப்பு பணிகள் மாவட்ட நிர் வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிக ளால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரு கின்றன. திட்டக்குழு மற்றும் நீர்வளத்துறை அதிகா ரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், நான் காம் மண்டல பாசனம் டிசம்பர் 28 ல் முடிவுற் றதைத் தொடர்ந்து, திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பின்னர், காண்டூர் கால்வாயில் டிசம்பர் 15 முதல் தண் ணீர் நிறுத்தப்ப்ட்டு, ரூ.11.6 கோடி மதிப்பி லான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, ஜனவரி 18 முதல் திருமூர்த்தி அணைக்கு நீர் வரத் தொடங்கியுள்ளது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விவசாயிகள் வைத்த கோரிக்கை ஏற்று, அரசு, பி.ஏ.பி திட்டத்தின் கீழ் உள்ள கால்வாய்களை தூர்வார ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, பரம்பிக்குளம் பிரதான கால்வாய் (PMC) உட்பட முதல் மண்டல பாசனத்திற்கு உட் பட்ட அனைத்து கால்வாய்களும் தூர்வாரப் படுகின்றன. மேலும், பூமி மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள பழுதடைந்த பி.எம்.சி கால்வா யின் சில பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இது குறித்து, தமிழ்நாடு தென்னை விவசா யிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் உடுக் கம்பாளையம் சு.பரமசிவம் கூறுகையில், ஜனவரி 24 ஆம் தேதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, முதல் மண்டல பாசனத்திற்கு முழுமையாக ஐந்து சுற்றுத் தண்ணீர் விடப்பட வேண்டும் என்பதே விவ சாயிகளின் முக்கிய கோரிக்கை என்றார்.</p>
