இந்துத்துவா குண்டர்களின் எதிர்ப்பை மீறி வெற்றி நடைபோடும் ‘மெயின் வாபஸ் ஆவூங்கா’ திரைப்படம்
14 Jul 2026, 9:23 pm

இந்துத்துவா குண்டர்களின் எதிர்ப்பை மீறி வெற்றி நடைபோடும் ‘மெயின் வாபஸ் ஆவூங்கா’ திரைப்படம்

இம்தியாஸ் அலியின் இயக் கத்தில், தில்ஜித் தோசாஞ்ச், ஷார்வரி மற்றும் வேதாங் ரெய்னா ஆகியோரின் நடிப்பில் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி யுள்ள திரைப்படம் மெயின் வாபஸ் ஆவூங்கா. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் (வசூல் சாதனை) மந்தமான தொடக்கத்தைப் பெற்றாலும், தற்போது பார்வையாளர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்துத்துவா கும்பல் மிரட்டல் 1

947ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினை யின் வலியை மையமாகக் கொண்ட இந்தப் படம், தாயகத்தை இழந்தவர்க ளின் வேதனையையும், ஒரு ஆழமான காதல் கதையையும் விவரிக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தைப் பிரி வினைவாதப் படம் என்றும், “தேச விரோதமானது” என்றும் பாஜக - ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா குண்டர்கள் கடுமையாக விமர்சித்தும், திரையரங்குகளுக்கு மிரட்டலும் விடுத்த னர். எனினும் மிரட்டலை கண்டுகொள்ளா மல் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை ஆர் வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

இந்துத்துவா கும்பலின் மிரட்ட லுக்குப் பதிலளித்த இம்தியாஸ் அலி, ”இந்தப் படத்தை இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு ஆதரவானதாகவோ அல்லது எதிரானதாகவோ பார்க்கக் கூடாது. ஒரு வீடு என்பது அடையாளம்; நினைவுகளின் களஞ்சியம் என்பதைப் பற்றியதே இந்த திரைப்படம் ஆகும். இந்தியப் பிரிவினையின் போது வெளி யேற வாய்ப்பிருந்தும், இந்தியா விலேயே இருக்கத் தீர்மானித்த இந்திய முஸ்லிம்களின் தேசபக்தியை திரைக்கதையில் வெளிப்படுத்தி யுள்ளோம். இந்திய முஸ்லிம்கள் இந்தி யாவிலேயே இருக்க முடிவெடுத்ததன் மூலம் தங்களது தேசபக்தியை மற்ற வர்களை விட அதிகம் நிரூபித்துள்ளனர்” என்று பதிலடி கொடுத்தார்.