தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மைலாங்குப்பத்தில் ஊராட்சி அலுவலகம் அமைக்க கோரி போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

28 Oct 2026, 1:08 am
மைலாங்குப்பத்தில் ஊராட்சி  அலுவலகம் அமைக்க கோரி போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

மைலாங்குப்பத்தில் ஊராட்சி அலுவலகம் அமைக்க கோரி போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கள்ளக்குறிச்சி, அக்.27-கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம், மைலங்குப்பம் ஊராட்சி தமிழக அரசால் புதியதாகஉருவாக்கப்பட்டதாகும்.

இந்த ஊராட்சிக்கு தற்காலிகமாக ஊராட்சி மன்ற அலுவலகம் மைலங்குப்பம் கிராமத்தில் உள்ள நியாயவிலை கட்டிடத்தின் ஒரு பகுதியிலேயே அமைக்க வேண்டும். அல்லது எங்கள் வீடுகளில் ஏதாவது ஒன்றில் தற்காலிக அலுவலகம் அமைக்கலாம் என்று அந்த கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நிரந்தரமான ஊராட்சி மன்ற அலுவலகம் அமைத்திட மைலங்குப்பம் கிராமத்தில் புல எண்.382/3A, 3B ஆகிய அரசுக்கு சொந்தமான இடங்கள் பொருத்தமானதாக இருக்கும்.

எனவே ஊராட்சி மன்ற அலுவலகம் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் மைலங்குப்பம் கிராமத்திலேயே அமைத்திட கோரி செவ்வாய்க்கிழமை (அக்27) திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக இருந்தபோது, அதிகாரிகள் போராட்டக்காரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எம்.வி.ஏழுமலை, மாவட்டத் தலைவர் ஏ.வி.ஸ்டாலின்மணி, சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயக்குமார், கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் எஸ்.ஜோதிராமன், ஒன்றிய பொருளாளர் எ.முருகதாஸ், ஒன்றிய பொருளாளர் எஸ்.சிவகண்டன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.