மயிலம் இந்தியா நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டு சிஐடியு நூதன போராட்டம்
17 Jul 2026, 12:22 am
<p><strong>மயிலம் இந்தியா நிறுவனத்தில் ஊதிய உயர்வு கேட்டு சிஐடியு நூதன போராட்டம்</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 16– புதுச்சேரி சேதராப்பட்டில் உள்ள மயிலம் இந்தியா நிறுவனத்தில் தொழி லாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக் கோரி சிஐடியு சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது. நிறுவனத்தில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த சில நாட்களாகக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொழிற்சாலை நிர்வாகம் புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை சமரச அதிகாரி முன்னிலையில் தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, வெற்றிலை, பாக்கு, பழங்களுடன் தாம்பூலம் வைத்து அதிகாரிகளை அழைக்கும் நூதனப் போராட்டத்தை ஊழியர்கள் நடத்தினர். சேதராப்பட்டு மயிலம் இந்தியா தொழிற்சாலை முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு சிஐடியு சங்கச் செயலாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். இதில் சிஐடியு மாநில நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், மதிவாணன், மணிபாலன், விஜயகுமார், சிவகுமார், ரவிச்சந்திரன், பச்சமுத்து, ராம சாமி உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
