முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

18 Jun 2026, 8:32 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்க மாநிலம் ரெட் ரோடில் ஒரு நாளில் ஒரு மணி நேரம் கூட ஈத் பெருநாள் தொழுகையை நடத்த முடியவில்லை. ஆனால் அதே ரெட் ரோடு யோகா தினத்திற்காக ஒரு வாரத்திற்குப் போக்குவரத்துக்காக மூடப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக ஆதரவாளர்களாக தாவியவர்கள் இதுதொடர்பாக அரசை விமர்சிக்கத் தயாரா?

யுவதேஷ் சமூக ஊடகம்

எம்.பி.,க்களை விலைக்கு வாங்கி திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்) கட்சியை பாஜக சுக்கு நூறாக நொறுக்கி வருகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நெருங்கும் சூழலில், பாஜகவின் இந்த செயல் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நாடாளுமன்றத்தில் ஏதோ பெரிய சட்டத்தை அமல்படுத்த இவ்வாறு செய்கிறதா? என்ற கேள்வியும் பலமாக எழுகிறது.

தி வயர் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன்

சர்வதேசக் கடற்பகுதியில் இந்திய மாலுமிகளை சட்டவிரோதமாகத் தாக்கிப் படுகொலை செய்த அமெரிக்க ராணுவத்தின் முப்படை தளபதியாக டிரம்ப் இருக்கிறார். இந்தியா தாக்கப்பட்டால் தாம் பாதுகாப்பதாக அவர் கூறுகிறார். அதுவும் மோடி தலைவராக இருக்கும் வரை மட்டுமாம். இந்த குப்பையைத் தன் முதன்மைச் செய்தியாக்கியுள்ளது ஒரு முன்னணி தேசிய நாளிதழ்.

பத்திரிகையாளர் அர்பா கானம் ஷெர்வானி

தங்களது குரலுக்குச் செவிசாய்க்கும், போராட்டங்களைப் புரிந்து கொள்ளும் மற்றும் தங்களுக்கு ஒரு குரலாக விளங் கும் ஒரு தலைவரே இளைஞர்களுக்குத் தகுதியானவர். ஆனால் ஒட்டுமொத்த இந்திய இளைஞர் தலைமுறையையே மோடி ஏமாற்றிவிட்டார்.

Share
FacebookXWhatsAppTelegram