தமிழ்நாட்டின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்
29 May 2026, 9:47 pm

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்

சென்னை, மே 29 - தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதி காரப்பூர்வ அறிவிப்பு வெளி யாகியுள்ளது

. கடந்த மே 26 அன்று, தில்லியில் நடந்த யுபிஎஸ்சி கூட்டத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகிய மூன்று சீனியர் டிஜிபி-க்களில் ஒருவரை நிய மிக்க ஒப்புதல் அளிக்கப் பட்டிருந்தது.

சீனியாரிட்டி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த வன்னியப் பெருமா ளுக்கு தமிழக அரசு நன்ன டத்தை சான்றிதழ் வழங்காத தால் அவரின் பெயர் நீக்கப் பட்டு மகேஷ்குமார் அகர்வா லின் பெயர் சேர்க்கப்பட்டது.

மகேஷ் குமார் அகர்வால் அதிமுக ஆட்சியில் சென்னை காவல் துறை ஆணையராகப் பணி யாற்றியவர். தற்போது ஒன்றிய அரசின் மாற்றுப்பணி அடிப் படையில் தில்லியில் பணி யாற்றி வந்தார்.

தற்போது டிஜிபி-யாக நியமிக்கப் பட்டதை அடுத்து, அவர் விரைவில் சென்னை திரும்ப உள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்தவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் அகர்வால், 1994-ஆம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

இவரது தந்தை ஒரு வழக்க றிஞர்.

அவரைத் தொடர்ந்து சட்டம் பயின்ற இவர், பின்னர் காவல்துறையில் இணைந்தார். தனது 22-ஆவது வயதிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, ஐபிஎஸ் அதிகாரி யாகத் தனது பணியைத் தொடங்கினார்.

காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்பு களில் பணியாற்றிய இவர், 2020 முதல் 2021 வரை சென்னை பெருநகர காவல் ஆணையராகப் பணியாற்றி னார்.மேலும், ஆயுதப்படை ஏடிஜிபி, பிஎஸ்எஃப் ஏடிஜிபி உள்ளிட்ட முக்கியப் பொறு ப்புகளையும் வகித்துள்ளார்.

இவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் இந்தப் பொறுப் பில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.