தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மகாத்மா  காந்தி  நினைவு

30 Jan 2026, 5:56 pm
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மகாத்மா  காந்தி  நினைவு
<p><strong>மகாத்மா காந்தி நினைவு தினம்: மதவெறியை மாய்க்க உறுதியேற்பு</strong></p> <p>ஈரோடு, ஜன.30- மகாத்மா காந்தியின் 78 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு, பல் வேறு இடங்களில் &lsquo;மதவெறியை மாய்க்க போராடுவோம்&rsquo; என உறுதி மொழி ஏற்கப்பட்டது &nbsp;மகாத்மா காந்தி இந்துத்துவா வெறி யர்களால் சுட்டு படுகொலை செய்யப் பட்ட தினமான வெள்ளியன்று (ஜன.30) பல்வேறு இடங்களில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டம், அந்தியூரில் சிறு பான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்விற்கு மாநிலக்குழு உறுப்பினர் ஹாத்திம்தாய் தலைமை வகி்த்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செய லாளர் ஏ.கே.பழனிசாமி, ஏ.கே.செல்வ ராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் எஸ். கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர். மொடக்குறிச்சி ஒன்றியம், எழுமாத்தூர் ஊராட்சி, அண்ணா நகரில் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், மகாத்மா &nbsp;காந்தியின் பெயரிலான கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை முழுமை யாக நிறைவேற்ற உறுதியுடன் போராடு வது என உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன், தாலுகா செயலாளர் த.தங்கவேல் உட்பட பலர் &nbsp;கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் &nbsp;அலுவலக வளாகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேன்மொழி தலைமையில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சேலம் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை &nbsp;சார்பில், சேலம் பழைய பேருந்து நிலை யம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி &nbsp;நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட &nbsp;ஒருங்கிணைப்பாளர் எம்.சேதுமாத வன், ஒருங்கினைப்புக்குழு உறுப்பி னர்கள் கவுன்சிலர் சையத்மூசா, என்.பிர வீன்குமார், ஆர்.குழந்தைவேல், கே. ஜோதிலட்சுமி, வி.வெங்கடேஷ், டோமி னிக் ஷேவியர், ஷேக் அப்துல்லா உள் ளிட்டோர் பங்கேற்றனர். &nbsp;கோவை கோவை மாவட்ட சிறுபான்மை மக் கள் நலக்குழு சார்பில், பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப் பட்டது. சிறுபான்மை மக்கள் நல குழு &nbsp;மாவட்ட அமைப்பாளர் என்.ஆர்.முரு கேசன், மாவட்டச் செயலாளர் சாதிக் பாஷா, மாவட்டத் தலைவர் ஜெரோம் &nbsp;ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து &nbsp;கொண்டனர். &nbsp;பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் முன்புறமுள்ள காந்தி சிலைக்கு விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் கே.ஏ.பட்டீஸ்வர மூர்த்தி தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, விதொச மாவட்டச் செயலாளர் சி.துரை சாமி, பொருளாளர் கே.மகாலிங்கம், சிபிஎம் தாலுகா செயலாளர் மூ.அன்பர சன், விசிக மண்டலச் செயலாளர் அன்பு, &nbsp;மாவட்டச் செயலாளர் ரவி, மதிமுக நக ரச் செயலாளர் குகன் மில் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி சமூக நல்லிணக்க மேடை சார்பில், &nbsp;தருமபுரி எஸ்வி சாலை பகுதியில் காந்தி &nbsp;உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, &nbsp;பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விஸ்வநா தன், நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.கிரைஸாமேரி, டி.எஸ்.ராமச்சந்திரன், கே.பூபதி, விசிக தொகுதி செயலாளர் கள் கலைவாணன், சக்தி (எ) சமத்து வன், ஒன்றியச் செயலாளர் சுரேஷ்வள வன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் என.சுபேதார், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் சீராஜூதீன், மாதர் சங்க நிர்வாகிகள் நிர்மலா ராணி, தமிழ் மணி, சுசிலா, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ராஜம்பாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, அரூர் ரவுண்டானா அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட் டது. இந்நிகழ்வில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, ஒன்றியச் செயலாளர் பி.குமார், விசிக மாவட்டச் செயலாளர் சாக்கன்சர்மா, திமுக ஆதிதிராவிடர் அணி மாநில துணைச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாப்பி ரெட்டிப்பட்டியில் நடைபெற்ற நிகழ் வில், சிபிஎம் நிர்வாகிகள் அம்புரோஸ், சொக்கலிங்கம், டி.சேகர், மாதர் சங்க வட்டச் செயலாளர் பி.கிருஷ்ணவேணி, மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணகி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் குறளரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பென்னாகரத்தில் சிபிஎம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆ.ஜீவானந்தம், ஏரியூரில் ஒன்றியச் செயலாளர் தங்க ராஜ், பாலக்கோட்டில் வாலிபர் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் பி.கோவிந்தசாமி &nbsp;ஆகியோர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் வாலி பர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ரவி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பாண்டியம்மாள், ராஜா, விவசாயிகள் சங்க வட்டத் தலை வர் ஜி.நக்கீரன், விசிக மாவட்டச் செய லாளர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு நகராட்சியில் காந்தியடிகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் நகராட்சி ஊழியர் கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். &nbsp;திருப்பூர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கள் மற்றும் கலைஞர் சங்கத்தின் சார் பில், உடுமலையிலுள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தபட்டு மத வெறிக்கு எதிராக உறுதி மொழி ஏற்கப்பட்டது. கிளைத் தலைவர் சுதா சுப்பிரமணியம் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளர் தோழன்ராஜா, கிளைச் செயலாளர் துரையரசன் &nbsp;உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர். வெள்ளகோவில் அமராவதி நக ரில் நடைபெற்ற நிகழ்விற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.ஆர்.இ.நடராஜ் தலைமை தாங் கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிவநாதபுரம் கிளைச் செயலாளர் லோகேஸ்வரன் வரவேற்றார். திமுக திருப்பூர் மாவட்ட இலக்கிய அணி தலைவர் பிரபு, நகர்மன்றத் தலைவர் கனியரசி முத்துக்குமார், திமுக ஒன்றி யச் செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.