2024ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் 190 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தைவிட நீக்கப்பட்ட வாக்காளர்கள் அதிகம்
40 minutes before

2024ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் 190 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தைவிட நீக்கப்பட்ட வாக்காளர்கள் அதிகம்

மும்பைமகாராஷ்டிராவில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆர்) வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 2.07 கோடி பெயர்கள்நீக்கப்பட்டுள்ளன. இதில் 2024ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் 190 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தைவிட நீக் கப்பட்ட வாக்காளர்களே அதிகம் என ‘சாபர்’ என்ற தனியார் ஆய்வு நிறுவனம் ஆய்வு முடிவை வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பான ஆய்வறிக் கையில், ”மகாராஷ்டிராவில் நீக்கப் பட்ட 2.07 கோடி பெயர்களில் 16.8% பேர் மட்டுமே இறந்தவர்கள். மீதமுள்ள 83% பேர் இடம் பெயர்ந்தவர்கள், முகவரியில் கண்டறிய முடியாதவர்கள் அல்லது வேறு தொகுதியில் பதிவானவர்கள் எனத் தேர் தல் ஆணையம் விளக்கம் அளித் துள்ளது. குறிப்பாக, மும்பை மற் றும் புறநகர்ப் பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் (34.7%) நீக்கப்பட்டுள்ளனர். அதாவது தானேயில் (மாவட்ட அளவில்) அதிகபட்சமாக 28.59 லட்சம் பெயர் களும், மும்பை நகரில் 9.50 லட்சம் பெயர்களும், மும்பை புறநகரில் 26.58 லட்சம் பெயர்களும் நீக்கப் பட்டுள்ளன. கொலாபா தொகுதியில் 46.9% வாக்காளர்கள் (1,19,606 பேர்) நீக்கப்பட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு தேர்தலில் பதிவான மொத்தவாக்குகளைவிட இங்கு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.குறிப்பாக, மகாராஷ்டிராவின் மொத்தம் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 190 தொகுதிகளில், 2024ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர் தலில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் இரண்டாம் இடம் பிடித்தவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தைவிட, உயிருடன் இருந் தும் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே போல திருநங்கையர் வாக்காளர்களில் 53.3% பேர் (3,250 பேர்) நீக்கப்பட்டுள்ளனர். இது மாநிலசராசரியைவிட 2.5 மடங்கு அதிகம். 18–29 வயதுக்கு உட்பட்ட பிரிவில், ஆண்களைவிட திருமணத்திற்குப் பின் இடம் பெயர்ந்தபெண்களின் நீக்க விகிதம் 2 மடங்கு அதிகமாக உள்ளது” என ‘சாபர்’ நிறுவனம் கூறியுள்ளது.மகாராஷ்டிராவில் எஸ்ஐஆர் பணிக்குப் பிறகு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் மறுபதிவுக்கான அவகாசம் வழங்கப்பட்டு, இறுதி வாக்காளர்பட்டியல் நவம்பர் 16ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என் பதகுறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்காக சேர்க்கப்பட்ட வாக்குகளை எஸ்ஐஆர் மூலம் ஞானேஷ் குமார் - பாஜக கூட்டணி நீக்கும் வேலையை தொடங்கியுள்ளதா?

இந்தியாவில் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எஸ்ஐஆர் பணிகளைத் தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது.ஆனால், அதற்கு முன்பு ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கடைசி நேரவாக்குப்பதிவு மூலம் பாஜக ஆட்சியைப் பிடித் தது என்ற குற்றச்சாட்டு எழுந் தது.அதாவது வாக்குப்பதிவு நாளில் ஒரு வாக்குச்சாவடியில் மாலை 5 மணி வரை 55% வாக்குகள்பதிவாகியிருந்தனஎன்றால், கடைசி ஒரு மணி நேரத்தில் மட்டும் 35% வாக்குகள் மிகக் கூடுதலாகப் பதிவாகி, மொத்த எண்ணிக்கை 80% ஆனது. கடைசிக் கட்ட வாக்குப் பதிவில் சந்தேகம் இருந்ததால், சிசிடிவி காட்சிகள் மற்றும்வாக்குப்பதிவுநிலவரங்களைத் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளிடம் அளிக்க மறுத்தது. இதனால் ‘இந்தியா’ அணி, தேர்தல் ஆணையம் - பாஜகவின் கள்ளக் கூட்டணி தேர்தலுக்காகச் சட்டவிரோதமாக வாக்காளர்களைச் சேர்த்ததாகக் குற்றம்சாட்டியது. மேலும் கர்நாடகாவில் ஒரே வீட்டில் 146 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் வெளியாகின.

இத்தகைய சூழலில், தேர்தலுக்காகச் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்களை, எஸ்ஐஆர் மூலம் தற்போது நீக்கி பாஜக முறைகேட்டை மூடி மறைக்க முயல்கிறதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. மகாராஷ்டிராவில் தற்போதைய எஸ்ஐஆர் பணிக்குப் பிறகு, 2024ஆம் ஆண்டுசட்டமன்றத் தேர்தலில் 190 தொகுதிகளில் வெற்றி வித்தியாசத்தைவிட நீக் கப்பட்ட வாக்காளர்களின் எண் ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது. 2024 தேர்தலில் பாஜக கூட்டணி 237 தொகுதிகளில் வெற்றி பெற்றது; எதிர்க்கட்சிகள் கூட்டணி 51 இடங்களில் மட்டுமே வென்றன. பாஜக வெற்றி பெற்ற 237 தொகுதிகளில் 196 தொகுதிகளின் முடிவு வாக்கா

ளர் சேர்ப்பு மூலம் சந்தேகத்திற் குரியதாக இருப்பதாக அப் போதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக 190 தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ்,”எஸ்ஐஆர் என்பது வாக்குகள் நீக்கம் - சேர்ப்பு தொடர்புடையது அல்ல. பாஜக முன்பு வாக்காளர் பட்டியலில் செய்த குளறுபடிகளை மூடி மறைக்கவே எஸ்ஐஆர் பணிகளை மேற் கொண்டு வருகிறது” எனக் குற்றம்சாட்டினார். தற்போது பிரகாஷ் ராஜின் குற்றச்சாட்டைப் போலவே, மகாராஷ்டிராவில் தேர்தலுக்காக வாக்குகளைச் சேர்த்து, தேர்தலுக்குப் பின் அவர்களை நீக்கித் தேர்தல் ஆணையம் - பாஜக கள்ளக் கூட்டணி சித்து விளையாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளதா?என்ற சந்தேகம் எழுந்துள்ளது.