பழங்குடி மாணவர்கள் அதிகாலை 3 மணிக்குக் கைது மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு அட்டூழியம்
5 Oct 2026, 8:30 pm
<p><strong>பழங்குடி மாணவர்கள் அதிகாலை 3 மணிக்குக் கைது மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு அட்டூழியம்</strong></p><p>மும்பைபாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கல்வி உதவித்தொகை, பள்ளிகள் - விடுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது மற்றும்நிறைவேற்றப்படாத பிற கோரிக்கைகள் குறித்து கடந்த 10 நாட்களுக்கு மேலாகப் பழங்குடி மாணவர்கள் போராடிவந்தனர். இந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத மகாராஷ்டிர பழங்குடியின நலத்துறை அமைச்சர் அசோக்உய்கேவின் (பாஜக) அலட்சியப் போக்கைக் கண்டித்தும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவலியுறுத்தியும் மும்பை ஆசாத் மைதானத்தில் திங்களன்று மாணவர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இந்தப் பேரணியில்பங்கேற்க நாசிக்கிலிருந்து பழங்குடி மாணவர்கள் மும்பையை நடைபயணம் மேற்கொண்டனர்.</p><p>அதிகாலை கைது நடவடிக்கைஇந்நிலையில், நாசிக்கிலிருந்து நடைபயணமாக மும்பை வந்தடைந்த பழங்குடியினமாணவர்கள் திலக் பவனில் தங்கியிருந்தபோது, திங்களன்று அதிகாலை 3 மணிக்குக் காவல்துறை கைது செய்துள்ளது. குற்றவாளிகளைப் போல விசாரணைக்கும் அழைத்துச் செல்ல முயன்றது. இதுதொடர்பாக மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்கல் கூறுகையில், “ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடத்தவும்,பழங்குடியின நலத்துறை அமைச்சரின் பதவியைப் பறிக்கக்கோரியும் மும்பை நோக்கி வந்த நூற்றுக்கணக்கான பழங்குடியின மாணவர்கள் திங்கட்கிழமை அதிகாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது அச்சுறுத்தல்கள் மூலம் மாணவர்களின் குரலை ஒடுக்க முடியாது” என அவர் எச்சரித்தார்.</p>
