தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகாராஷ்டிராவிலும் வினாத்தாள் கசிவு ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு

27 Jun 2026, 8:20 pm
மகாராஷ்டிராவிலும் வினாத்தாள் கசிவு ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு

மகாராஷ்டிராவிலும் வினாத்தாள் கசிவு ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஞாயிறன்று நடைபெறவிருந்த ஆசிரி யர் தகுதித் தேர்வு (TET - டெட்), வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகா ரைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் தற் காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரகசியத் தகவலின் அடிப்படையில், தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதி யில் உள்ள ஒரு ஹோட்டலில் சனிக் கிழமை அதிகாலையில் காவல்துறை யினர் சோதனை நடத்தினர்.

அங்கிருந்த சில நபர்களிடம் டெட் தேர்வுக்கான வினாத்தாள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனே மகாராஷ்டி ரா மாநில தேர்வு கவுன்சில் அதிகாரி கள் வரவழைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட தில், அவர்களிடம் இருந்தது ஞாயிற்றுக் கிழமை நடக்கவிருந்த அசல் வினாத்தாள் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக மும்பை சஹார் விமான நிலையத்தில் வைத்து 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வர்கள் தில்லி, ஹரியானா மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து 4 செட் வினாத் தாள்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தானே மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.