முந்தய பக்கம்

மகாராஷ்டிராவில் கோர விபத்து 7 பேர் பலி!

3 Oct 2026, 9:57 pm
மகாராஷ்டிராவில்  கோர விபத்து 7 பேர் பலி!

மகாராஷ்டிராவில் கோர விபத்து 7 பேர் பலி!

மகாராஷ்டிராவின் வார்தா பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தசரா பண்டிகைக்காக துர்கா சிலையை வாங்க ஷேகான் பகுதிக்கு டெம்போ வேன் ஒன்றில் சென்றனர். சிலையைப் வாங்கிய பின்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சனிக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் அமராவதி மாவட்டம், தமன்காவ் ரயில் நிலையம் அருகே உள்ள சம்ருத்தி விரைவுச்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த 16 சக்கரங்கள் கொண்ட ராட்சத

சரக்கு லாரி டெம்போ வேன் மீது பலமாக மோதியது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram