முந்தய பக்கம்

மகாராஷ்டிரா: ரேஷன் பொருட்களுக்கான தொகையை திருப்பி செலுத்த நோட்டீஸ்!

4 hours before
மகாராஷ்டிரா: ரேஷன் பொருட்களுக்கான தொகையை திருப்பி செலுத்த நோட்டீஸ்!
<p>மகாராஷ்டிராவில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு ரேஷனில் வாங்கிய பொருட்களுக்கான தொகையை திருப்பி செலுத்துமாறு அம்மாநில பாஜக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p><p>&#39;மிஷன் சுதார்&#39; (Mission Sudhar) திட்டத்தின் கீழ், தகுதியற்றவர்களாகக் கண்டறியப்பட்ட பயனாளிகளின் பட்டியலை ஒன்றிய அரசு மகாராஷ்டிராவின் உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு அனுப்பியுள்ளது. இதில் 75 லட்சம் பயனாளிகள் தகுதியற்றவர்கள் என ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தின் இந்தாபூர், டவுண்ட் மற்றும் பிற பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் ரேஷனில் பெற்ற மானிய விலை உணவு தானியங்களுக்கான தொகையைத் திருப்பிச் செலுத்துமாறு அம்மாநில பாஜக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.</p><p>விவசாயி ஒருவரின் பெயரில் டிராக்டர் பதிவு செய்யப்பட்டிருப்பது, கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் ஒருவரின் உறவினர் வருமான வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, ரேஷன் பயனாளிகள் பட்டியலிலிருந்து பலரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram