முந்தய பக்கம்

தேர்வு முடிவால் மன உளைச்சல்: மகாராஷ்டிராவில் 19 வயது மாணவி தற்கொலை!

27 Jul 2026, 12:00 pm
தேர்வு முடிவால் மன உளைச்சல்: மகாராஷ்டிராவில் 19 வயது மாணவி தற்கொலை!

மகாராஷ்டிராவில் நீட் தேர்வு முடிவால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிரா மாநிலம் அஹில்யாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கிதா சங்காலே (19) என்ற மாணவி கடந்த சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிதா தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தர்கொலை செய்துகொண்ட அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பர்றியுள்ளனர்.

அதில், மிகவும் சிரமப்பட்டுப் படித்தும் நீட் தேர்வால் மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறாமல் போனதாகவும், உங்கள் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு உருக்கமாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அங்கிதா நீட் தேர்வு முடிவால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தேர்வு முறைகேடு குறித்த செய்தி மன அழுத்ததை தீவிரப்படுத்தியதாகவும் அங்கிதாவின் தந்தை தெரிவித்துள்ளார்

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவியின் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram