முந்தய பக்கம்

மகாராஷ்டிரா: நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை!

25 Jun 2026, 7:37 pm
மகாராஷ்டிரா: நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை!

நீட் மறுதேர்வு எழுதிய மகாராஷ்டிராவை சேர்ந்த சுஷில் தாகே (18) என்ற மாணவர், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்த சுஷில் தாகே (18) என்ற மாணவர் கடந்த ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வை எழுத்தியுள்ளார். அதன் பிறகு, தேர்வு சரியாக எழுதவில்லை என்ற மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று சுஷில், கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மாணவர் இறப்பதற்கு முன்பு, தனது தாயிடம் ‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று குறிப்பிட்டு, 33 விநாடிகள் கொண்ட காணொளிச் செய்தி ஒன்றை செல்போனில் பதிவு செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவரின் காணொளியை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram