மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்நாசிக் நகர வீடுகளில் விரிசல்
9 Aug 2026, 10:44 pm

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்நாசிக் நகர வீடுகளில் விரிசல்

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்படு வது சகஜ நிகழ்வாக மாறிவிட்டது. கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் ஜூலை 28ஆம் தேதி வரையிலும், பின்னர் ஆகஸ்ட் 6ஆம் தேதியும் நிலஅதிர்வுகள் பதிவாகியிருந்தன. இதன் தொடர்ச்சியாக, சனியன்று நள்ளிரவு 10 மணிக்கு நாசிக்கில் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஞாயிறன்று அதிகாலை 5:33 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக நாசிக் நகரம், சுர்கானா, கல்வான், தேவலா, சந்தவாட், பேத், திண்டோரி ஆகிய தாலுகாக்களில் வீடுகள் அதிர்ந்ததால், பொதுமக்கள் அச்சத்தில் தங்களது வீடுகளை விட்டு வீதிகளுக்கு அலறியடித்து ஓடிவந்தனர். நாசிக் நகரத்தின் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.