பாஜக அரசைக் கண்டித்து மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
42 minutes before

பாஜக அரசைக் கண்டித்து மகாராஷ்டிராவில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோகுல் பால் சங்கம் (பால் உற்பத்தியாளர்கள்) உள்ளது. இதன் 25 நிர்வாகக் குழு இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களையும், பாஜக கூட்டணி 12 இடங்களையும் கைப்பற்றின.

பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில், தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை காங்கிரஸ் கூட்டணிக்கே இருக்க வேண்டும். ஆனால், தலைவர் தேர்தலுக்காக அக். 29 அன்று கூட்டம் கூட்டப் பட்டபோது, பாஜக கூட்டணியின் 13 நிர்வாகிகளில் 12 உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். கோகுல் பால் சங்கத்தின் விதிமுறைகளின்படி, தலைவர் தேர்தல் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 14 உறுப்பினர்கள் வருகை தர வேண்டும். ஆனால் 12 பாஜக உறுப்பினர்கள் வராததால், கூட்டத்திற்கான குறைந்தபட்ச வருகை எண்ணிக்கை கிடைக்கவில்லை.பாஜக தரப்பில் ஏதோ சதி நடப்பதை உணர்ந்த காங்கிரஸ் கூட்டணி, அன் றைய தினமே தங்களது 13 உறுப்பினர்களின் ஆதரவோடு சசிகாந்த் பாட்டீல் சூயேகரை கோகுல் பால் சங்கத் தலைவராக அறிவித்தது.

இதையடுத்து, அக். 30 அன்று மகாராஷ்டிராவின் பாஜக அரசு, காங்கிரஸ் கூட்டணியின் இந்த முடிவைச் செல்லாது என அறிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடைமுறையில் உள்ள பழைய விதிகளின்படியே கூட்டத்தைக் கூட்டி தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என உத்தரவிட்டது. நீதிமன்றத்தின்இந்த உத்தரவால், கூட்டத்தில் பங்கேற்பதைத் தவிர பாஜக கூட்டணிக்கு வேறு வழியில்லாமல் போனது.

ஆனால் மகாராஷ்டிர பாஜக அரசு மாநில கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் 1960 (பிரிவு 73ஏ)-இல் திருத்தம் கொண்டு வந்து நேரடியாகத் தேர்தல் விதிகளையே மாற்றியது. இந்தத் திருத்தத்தின்படி, ரூ.500 கோடிக்கும் மேல் விற்றுமுதல் கொண்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசாங்கமே 5 இயக்குநர்களை நியமிக்கும்; அதில் 4 பேருக்கு வாக்குரிமையும் வழங்கப்படும். இந்தப் புதிய விதிமுறையைக் கோகுல் பால் சங்கத்திற்கு பயன்படுத்தினால், பாஜக கூட்டணியின் பலம் 12இல் இருந்து 16 ஆகஉயர்ந்து, பெரும்பான்மை அப்படியே தலைகீழாக மாறிவிடும்.அதனால் மகாராஷ்டிரா பாஜக அரசாங்கத்தின் இந்தச் சதித்திட்டத்தைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் கோலாப்பூரில் வீதியில் இறங்கி தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் பாஜக - வாக்குத் திருட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.