மகாராஷ்டிராவின் மகளிர் நிதியுதவி திட்டத்தில் மெகா முறைகேடு ரூ.3,541 கோடி கூடுதல் செலவு ; ரூ.15,586 கோடி நிதி முடக்கம்
yesterday

மகாராஷ்டிராவின் மகளிர் நிதியுதவி திட்டத்தில் மெகா முறைகேடு ரூ.3,541 கோடி கூடுதல் செலவு ; ரூ.15,586 கோடி நிதி முடக்கம்

மும்பை பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்று வரும் மகாராஷ்டிரா வில் ‘முக்யமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் 21 முதல் 65 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள பெண்க ளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நேரடிப் பணப் பரிமாற்றம் உதவித் தொகை வழங்கப்பட்டு வரு கிறது. 2024ஆம் ஆண்டு ஜூன் 28 தொடங்கப் பட்ட இந்த திட்டத்தில் பெரும் முறைகேடு அரங் கேற்றப்பட்டுள்ளது என தலைமை கணக்காயர் (சிஏஜி) அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.

இதுதொடர்பாக மகாராஷ்டிர சட்டமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட ‘மாநில நிதித் தணிக்கை அறிக்கை 2024-25’-யில் மேலும் கூறப்பட்டுள் ளதாவது,”மகாராஷ்டிரா அரசு ‘லட்கி பஹின் யோஜனா’ திட்டத்திற்கு ஒதுக்கிய பட்ஜெட் தொகை ரூ.29,693.09 கோடி ஆகும். ஆனால், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செய்த செலவோ ரூ.33,237.24 கோடி. அதாவது, அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட ரூ.3,541.16 கோடி கூடுதலாகச் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான விளக்கத்தை அந்தத் துறை வழங்கவில்லை. அதே போல ஜனவரி முதல் மார்ச் 2025 வரை, அரசு கருவூலத்திலி ருந்து எடுக்கப்பட்ட ரூ.15,586 கோடி, உடனடியா கப் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் ‘மெய் நிகர் தனிப்பட்ட வைப்பு கணக்குகளில்’ முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

நிதி ஒழுங்குமுறை மற்றும் வரவு-செலவுத் திட்டக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக இந்தச் செயல் அமைந்துள்ளது. உடனடித் தேவை இல் லாமல் அரசு கருவூலத்திலிருந்து பணத்தை எடுத்து வைப்பு கணக்குகளில் வைப்பது, பொது நிதி மீதான சட்டமன்றத்தின் கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் பலவீனப்படுத்துகிறது” என்று தணிக்கை அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா அரசின் இந்த பெரும் முறை கேட்டுச் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.