முந்தய பக்கம்

மகாராஷ்டிராவில் மகளிர் உதவித் தொகை திட்டத்தில் இருந்து 92 லட்சம் பேர் நீக்கம்!

14 Jul 2026, 11:14 am
மகாராஷ்டிராவில் மகளிர் உதவித் தொகை திட்டத்தில் இருந்து 92 லட்சம் பேர் நீக்கம்!

மகாராஷ்டிராவில் மகளிர் உதவித் தொகை திட்டத்திலிருந்து சுமார் 92 லட்சம் பயணாளர்கள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மகா​ராஷ்டிரா அரசு ‘மாஜி லட்கி பஹின் யோஜ​னா’ என்ற ​திட்​டத்​தின் கீழ் தகு​தி​யுள்ள ஏழை மற்றும் நடுத்​தரக் குடும்​பப் பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.1,500 வழங்​குகிறது.

இதன்மூலம் 2.4 கோடி பேர் பயணாளர்களாக இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்திலிருந்து சுமார் 92 லட்சம் பயணாளர்கள் அதாவது 38% பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

eKYC பூர்த்தி செய்யாதது, வயது வரம்பு, வருமான உச்ச வரம்பு உள்ளிட்ட பல்வேறு காரங்களின் அடிப்படையில் நீக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இத்​திட்​டத்​தில் முறை​கே​டாக பலன் பெற முயன்ற 14,000 ஆண்​களின் பெயர்களும் நீக்​கப்​பட்​டுள்​ளன.

திடீரென ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளது நாடுமுழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளதோடு சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Share
FacebookXWhatsAppTelegram