ஸ்கேன் இந்தியா
11 Dec 2025, 3:52 pm

ஸ்கேன் இந்தியா

2 கூட்டணியைச் சேர்ந்த சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தலைமை) அமைச்சர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் வலம்வந்து கொண்டிருக் கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பாக சட்ட மன்ற உறுப்பினர் மகேந்திர தல்வியின் வீடியோ வெளியானது. சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிக் கூட்டணி இதை விவாதிக்க வேண்டும் என்று எழுப்பின. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த நாளே அமைச்சர் பரத் கோகவாலே கட்டுக்கட்டாகப் பணத்துடன் இருக்கும் வீடியோ வெளியிடப்பட்டது. ஏற்கனவே, உள்ளாட்சித் தேர்தல் இடங்கள் பங்கீடு, நிதியை ஒதுக்குவது உள்ளிட்ட பிரச்சனை களில் ஆளும் கூட்டணிக்குள் வெட்டு, குத்து நடக்கையில் இது மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 தனது நாடகத்தில் ஒரு காட்சியை காங்கிரசின் மக்களவை உறுப்பினர் சசி தரூர் நிறைவு செய்திருக்கிறார். தனக்கும், கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகளில் தலைமையை சீண்டு வதற்காக பாஜகவுடன் நெருக்கமாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். சாவர்க்கர் பெயரிலான விருது வழங்க ஒரு தொண்டு நிறுவனம் இவரை அணுகியிருக்கிறது. இவரும் இதற்கு முன்பாக யார், யாருக்கெல்லாம் தந்திருக்கிறீர்கள் என்று ஆவலாகக் கேட்டிருக்கிறார். விருதுக்கான தேர்வுக்குழுவின் தலைவரும் இவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். விருதுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து, நிகழ்ச்சிக்கான தேதியையும் வெளியிட்டு விட்டார்கள். இந்த நான்கு காட்சிகள் வரையில் தொண்டு நிறுவனத்தினரிடம் ரகசியமாகப் பேசி வந்த தரூர், பல்டி அடித்து விட்டார். எனக்குத் தெரியவே தெரியாது என்கிறார். நாடகத்தின் அடுத்த காட்சிகள் விரைவில் தொடங்கும் என்று கட்சிக்காரர்களே கிண்டலடிக்கிறார்கள்.

5 025 ஆம் ஆண்டில் மட்டும் ராஜஸ்தான் பல்கலைக்கழகங்களில் ஐந்து துணை வேந்தர்கள் தங்கள் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் அனைவருமே பாஜக ஆதரவாளர்கள் என்பதாலேயே இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்களாவர். இவர்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் பாஜகவின் ஏபிவிபி அமைப்பில் உள்ளவர்கள்தான். இந்தத் துணை வேந்தர்கள் மீது குற்றச்சாட்டுகளை எழுப்புவது, போராட்டங்களை நடத்துவது, நீக்கத்தைக் கொண்டாடுவது என்று ஓராண்டு காலமாகப் போய்க் கொண்டிருக்கிறது. என்ன காரணம்..? முதல் காரணம், இந்த ஐந்து பேரும் பழைய ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவால் நியமிக்கப்பட்டவர்கள். ஐவரில் ஒருவரான ரமேஷ் சந்திரா, “ஏபிவிபிக்காரர்களுக்குத் தேவை நிதி. அவர் களுக்குதான் உணவுவிடுதி, சைக்கிள் நிறுத்தம் ஒப்பந்தங்களைத்தர வேண்டும்” என்று அம்பலப்படுத்துகிறார். உட்கட்சிச் சண்டையை இரண்டு ஆளுநர்கள் தொடர்கிறார்கள் என்பதுதான் நிலவரம்.

466 கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இருந்த 466 தொழிலகங்கள் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. நடப்பாண்டில் மட்டுமே மூடப்பட்டவற்றின் எண்ணிக்கை 100ஐத் தொடுகிறது. அமெரிக்காவின் வரி விதிப்புதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. கொரோனா காலத்தில் மூடப்பட்ட 113 தொழிலகங்களையும் மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையும் சரிந்திருக்கிறது. இந்த மண்டலங்கள் அதிகப்படியான சலுகைகளை அனுபவித்து வருபவையாகும். அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி கிடையாது. உள்ளூரில் மேற்கொள்ளப்படும் கொள்முதலுக்கும் வரி இல்லை. அனுமதி அளிக்கப்பட்ட 420 சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் சுமார் 270 மண்டலங்கள்தான் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.