தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகாராஷ்டிராவில் பலத்த மழை 13 பேர் பலி; மிதக்கும் மும்பை; முடங்கிய 9 மாவட்டங்கள் மும்பை - புனே விரைவுச் சாலை, சட்டப்பேரவை மூடல்

6 Jul 2026, 9:16 pm
மகாராஷ்டிராவில் பலத்த மழை 13 பேர் பலி; மிதக்கும் மும்பை; முடங்கிய 9 மாவட்டங்கள் மும்பை - புனே விரைவுச் சாலை, சட்டப்பேரவை மூடல்

மகாராஷ்டிராவில் பலத்த மழை 13 பேர் பலி; மிதக்கும் மும்பை; முடங்கிய 9 மாவட்டங்கள் மும்பை - புனே விரைவுச் சாலை, சட்டப்பேரவை மூடல்

கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. கணிப்பை தாண்டி பெய்து வரும் இந்த கன மழையால் மும்பை, புனே, தானே மற்றும் பால்கர் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. சிவப்பு எச்சரிக்கையுடன் 300 மி.மீ அளவில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் மும்பை மாநகரம், புறநகர் வெள்ளக்காடாய் காட்சி அளித்து வருகிறது.

13 பேர் உயிரிழப்பு

இந்நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் மகாராஷ்டிரா முழுவதும் பெய்த கனமழை க்கு 13 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்துள்ளார். அதிகப் பட்சமாக மும்பையின் மான்குர்த் பகுதியில் கனமழையால் மூன்று மாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். அதே போல குர்லா மற்றும் ஆரே காலனி பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்த விபத்துகளில் சிக்கி இருவர் பலியாகியுள்ள னர். புனே மாவட்டத்தின் மாவல் தாலுகாவில் உள்ள பதன் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு மண்ணோடு மண்ணாகப் புதைந்தது. இதில் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது, மேலும் இருவரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிரமாக ஈடு பட்டுள்ளது. பிம்ப்ரி-சிஞ்ச்வாடில் உள்ள புகழ்பெற்ற மோர்யா கோசாவி கணபதி கோவி லும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மும்பையில் 350 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

மேற்கு ரயில்வே சேவைகள் முற்றிலும் முடக்கம்

மழை மற்றும் பலத்த காற்று காரணமாக திங்கள்கிழமை மும்பை, அதன் அண்டை மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. புனேவிற்கான பயண ரயில்கள் நிறுத்தப்பட்டதோடு, ராய்காட் பகுதி யில் உள்ள புறநகர் ரயில் சேவைகளும் முடங்கின. மேலும், சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து கணிசமாக மந்த மடைந்தது.

தொடர்மழை காரணமாக தனியார் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் திங்கள்கிழமை அறிவுறுத்தி யுள்ளது. மேலும், அத்தியாவசியமற்ற மற்றும் பகுதி-அரசு அலுவலகங்களுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வேயின் சேவைகள் முற்றிலும் முடங்கின. தண்டவா ளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், மும்பை மற்றும் தெற்கு குஜராத்தின் பல்வேறு நிலை யங்களில் 20-க்கும் மேற்பட்ட தூரப் பயண ரயில்கள் நிறுத்தப்பட்டன. ரயில்கள் ரத்து, வழிமாற்றம் மற்றும் தாமதம் போன்ற காரணங்களால் 40க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

சட்டமன்றம் ஒத்திவைப்பு

மும்பையில் நிலவும் அதீத வானிலை காரணமாக மகாராஷ்டிர சட்டப்பேரவை மற்றும் மேலவை ஆகிய இரு அவைகளும் திங்கள் கிழமை முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மழை பாதிப்புகள் குறித்த விரிவான அறிக்கை யை முதலைமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் செவ்வாய்க்கிழமை அவையில் தாக்கல் செய்ய வுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பள்ளி, கல்லூரிகள் மூடல்

மும்பை, புனே, தானே மற்றும் பால்கர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை விடு முறை அறிவிக்கப்பட்டது. மும்பை பல்கலைக் கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கனமழை நீடிக்கும்

கனமழையால் மகாராஷ்டிராவின் பெரும் பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து, இயல்புநிலையை இழந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்குப் பலத்த முதல் மிகப்பலத்த மழை (மும்பை மற்றும் அத னை சுற்றியுள்ள மாவட்டங்கள்) பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்து ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.

ஒடிசா மாநிலம் முழுவதும் ‘அலர்ட்’ 5 மாவட்டங்களில் பள்ளிகள் மூடல்

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநில அரசு அனைத்து மாவட்டங்களையும் உஷார் நிலையில் இருக்க உத்தர விட்டுள்ளது. பர்கர், சம்பல்பூர், அங்குல், சோன்பூர், பௌத், நுவாபடா மற்றும் போலங்கிர் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் பலத்த மழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர் மழையைக் கருத்தில் கொண்டு கட்டக், கந்தமால், சம்பல்பூர், சோன்பூர் மற்றும் பர்கர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் திங்களன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர்

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மற்றும் குல்லு மாவட்டங்களில் ஞாயிறன்று நள்ளிர வில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கியச் சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன. மண்டி மாவட்டத்தின் ஜோகிந்தர்நகரில் அதிகபட்சமாக 97 மி.மீ மழை பதிவாகி யுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்ட்வார் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.