விவசாயிகள் போராட்டம் மாபெரும் வெற்றி பணிந்தது மகாராஷ்டிர பாஜக அரசு ; கோரிக்கைகளை ஏற்பதாக முதலமைச்சர் உறுதி
29 Oct 2026, 9:45 pm

பணிந்தது மகாராஷ்டிர பாஜக அரசு ; கோரிக்கைகளை ஏற்பதாக முதலமைச்சர் உறுதி

மும்பைபாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும்; ‘லாட்லி பெஹ்னா’ (மகளிர் நிதியுதவி) பயனாளிகளுக்கான நிதி உதவியை மீண்டும் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து திங்களன்று அறிவித்தது போல அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் அகோலாவிலிருந்து மும்பையிலுள்ள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘வர்ஷா பங்களா’வை நோக்கி வாகனப் பேரணி தொடங்கியது. 20 மாவட்டங்களைச் சேர்ந்த 12,000க்கும் மேற்பட்ட விவசாயிகளும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களும் மும்பை நோக்கிபயணித்தன. சில இடங்களில்விவசாயிகள் நடைப்பயணமாகவும் சென்றனர். செவ்வாய்க்கிழமை கசாரா காட் கணவாய் வழியாகமும்பை நோக்கி வாகனப் பேரணிப் படையெடுத்துச் சென்றது. விவசாயிகளின் வாகனப் பேரணியால் அதிர்ச்சி அடைந்த மகாராஷ்டிர பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவசரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அசோக் தாவ்லே, இணைச்செயலாளர் அஜித் நவாலே, மாநலத் துணைத் தலைவரும், எம்எல்ஏவுமான வினோத் நிகோலே, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே. பி. காவித் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு, மும்பை மலபார் குன்றில் உள்ள அரசின் ‘சஹயாத்ரி விருந்தினர் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. மகாராஷ்டிரா அரசுசார்பில் முதலமைச்சர் தேவேந்திரபட்னாவிஸ் (பாஜக), துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா), சுனேத்ரா பவார் (தேசியவாத காங்கிரஸ்) மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

2 மணிநேரம்இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. கோரிக்கை ஏற்கவிட்டால் வாகனப் பேரணி மும்பையை நோக்கி நகரும் என விவசாயிகள் சங்கபிரதிநிதிகள் அதிரடியாக அறிவித்தனர். இறுதியில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். அதன்படி தேசிய பேரிடர் நிவாரண நிதியின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவித் தொகை; நிலுவையில் உள்ள இரண்டு தவணைகளை விரைவில் விடுவிப்பு ; கடன்களை தவறாமல் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வழங்கி வரும் ரூ.50,000 ஊக்கத்தொகை; நிலம் மற்றும் வீட்டு மனை நிலங்களை சாகுபடிசெய்வோரின் பெயரில் ஒப்படைப்பது; ‘பால் ஹிர்தா’ (சிறிய கடுக்காய்) கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய, அகில இந்திய விவசாய சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆய்வுக் குழு; பண்டாரதாரா அணையில்இருந்து பழங்குடி சமூகங்களுக்கு தண்ணீர் வழங்குவது; சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை ரத்து செய்வது ; ‘லாட்லி பெஹ்னா’ திட்டத்தில் 92 லட்சம் பெண்களை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் குழுவிற்கு அரசு உறுதியளித்தது.

அடுத்த வாரம்ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்களுடனான மற்றொரு கூட்டம் நவம்பர் 4 அன்று நடைபெறவுள்ளது. அதன்பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என மகாராஷ்டிர பாஜக அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை இந்நிலையில், மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராட்ட வெற்றி தொடர்பாக அகில இந்தியவிவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஜு கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில்,”அரசின் உறுதியளிப்பால் வாகனப் பேரணியை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. வாக்குறுதிகள் அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும், எஞ்சியுள்ள கோரிக்கைகளை வென்றெடுக்கவும் தொடர்போராட்டத்தை முன்னெடுப்போம். அதே போல ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட்டால் வாகனப் பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் மீண்டும் வெடிக்கும்” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.