பாஜக அரசைப் பணியவைத்த விவசாயிகள் பேரணி
29 Oct 2026, 9:34 pm
<p><strong>பாஜக அரசைப் பணியவைத்த விவசாயிகள் பேரணி</strong></p><p>பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 80 சதவிகிதத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும்; ‘லாட்லி பெஹ்னா’ (மகளிர் நிதியுதவி) பயனாளிகளுக்கான நிதி உதவியை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) அக். 26 அன்று அகோலாவிலிருந்து மும்பையை நோக்கி வாகனப் பேரணி நடத்தியது. 20 மாவட்டங்களைச் சேர்ந்த 12,000க்கும் மேற்பட்ட விவசாயிகளும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களும் மும்பை நோக்கி பயணித்தன. இந்த மாபெரும் வாகனப் பேரணியின் வீச்சால் அச்சமடைந்த மகாராஷ்டிர பாஜக அரசு, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்பதாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸே முன்னின்று அறிவித்துள்ளார். (செய்தி : 2)</p>
