தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகள் போராட்டம் மாபெரும் வெற்றி மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசு கடன் தள்ளுபடி நிபந்தனைகளைத் திரும்பப் பெற்றது!

yesterday
விவசாயிகள் போராட்டம் மாபெரும் வெற்றி மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசு கடன் தள்ளுபடி நிபந்தனைகளைத் திரும்பப் பெற்றது!

விவசாயிகள் போராட்டம் மாபெரும் வெற்றி மகாராஷ்டிர பாஜக கூட்டணி அரசு கடன் தள்ளுபடி நிபந்தனைகளைத் திரும்பப் பெற்றது!

மும்பை அகில இந்திய விவசாயிகள் சங்கம் முன்னெடுத்த தொடர் போராட்டங்க ளின் விளைவாக, மகாராஷ்டிரா வில் பாஜக தலைமையிலான அரசு, விவசா யக் கடன் தள்ளுபடித் திட்டத்தில் விதிக்கப்பட்டி ருந்த இரண்டு முக்கிய நிபந்தனைகளைத் திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய விவசாயி கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 10-11 மற்றும் ஜூலை 10 ஆகிய தேதிக ளில் மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்க ளிலும், தாலுகாக்களிலும் முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடியை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் தீவிரமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அஜித் நவாலே, மாநிலத் தலைவர் உமேஷ் தேஷ்முக் ஆகியோர் இந்த மாநில அளவிலான போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி, போராட்டங்களை பிரம்மாண்டமாக நடத்தினர்.

சட்டமன்றத்திலும் குரல்

அதே சமயம் மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான ஜூலை 10 அன்று, அகில இந்திய விவசாயிகள் சங்க மூத்த தலைவர்களில் ஒருவரும், தஹானு தொகுதி எம்எல்ஏவுமான வினோத் நிகோலே, சட்டப்பேரவை வளாகத்தில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின் போது “விவசாயக் கடன் தள்ளுபடிக்கான அனைத்து நிபந்தனைகளையும் நீக்கு! விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளு படியை உறுதி செய்!” என்ற முழக்கங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி அவர் கவனத்தை ஈர்த்தார்.

மாபெரும் வெற்றி

இந்நிலையில், பல மாதங்களாக அகில இந்திய விவசாயிகள் சங்கம் முன்னெடுத்த ஐக்கிய விவசாயிகள் போராட்டத்தின் விளை வாக, கடன் தள்ளுபடித் திட்டத்தில் இருந்த கடுமையான நிபந்தனைகளில் இரண்டை மகா ராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு ரத்து செய்துள்ளது. 2017இல் (பட்னாவிஸ் ஆட்சி) ன்றும், 2019இல் (தாக்கரே ஆட்சி) ஒன்று மாக இரண்டு கடன் தள்ளுபடிகள் அறிவிக்கப் பட்டன. இவை இரண்டுமே அகில இந்திய விவ சாயிகள் சங்கம் முன்னின்று நடத்திய ஒருங்கி ணைந்த விவசாயிகள் போராட்டங்களின் நேரடி விளைவாகும். அந்த இரண்டு திட்டங்க ளின் மூலம் மொத்தம் 90.83 லட்சம் விவசாயி களுக்கு ரூ.44,508 கோடி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது.

2026ஆம் ஆண்டின் மூன்றாவது கடன் தள்ளுபடித் திட்டத்தின் மூலம் 56.40 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.36,000 கோடி வழங்கப் படுவதாக தற்போதைய பாஜக முதலமைச்சர் பட்னாவிஸ் அறிவித்துள்ளார். ஆனால் இந்த புள்ளிவிவரம் மிகைப்படுத்தப்பட்டதாகும் (கூறப்பட்டதை விடப் பெரியதாகச் சொல்லப் பட்டது). இருப்பினும், இந்த மூன்றாவது கடன் தள்ளுபடி மற்றும் இத்திட்டத்தில் இருந்த இரண்டு முக்கிய நிபந்தனைகளை அரசு திரும்பப் பெற்றது மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத் திற்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாகும். குறிப்பாக, நாட்டில் விவசாயக் கடன் தொ டர்பான தற்கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக மகாராஷ்டிரா இருப்பதால் இது விவசாயிகளுக்கு ஒரு முக்கியமான நிவாரண மாகும்.

மோடி அரசுக்கு கண்டனம்

இருப்பினும், மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, கடந்த 12 ஆண்டுகளாக நாடு தழுவிய அளவில் விவசாயிகளுக்கு ஒரு பைசா கூட கடன் தள்ளுபடி செய்ய மறுத்து விட்டது என்பதை அழுத்திச் சொல்ல வேண்டி யது மிகவும் அவசியமானது ஆகும். அதே பாஜக அரசு, 2014-15 முதல் 2024-25 வரையி லான நிதி ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள பொதுத்துறை வணிக வங்கிகளின் வாராக் கடன் கணக்கில் சுமார் ரூ.16.35 லட்சம் கோடி யைத் தள்ளுபடி செய்துள்ளது; இதில் பெரும் பகுதி பெருநிறுவனங்களின் கடன்களே என்பது குறிப்பிடத்தக்கது” என அதில் கூறப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.