தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

12,000 விவசாயிகள் ; 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாபெரும் பேரணி போராட்ட எச்சரிக்கைக்கு பணிந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த மகாராஷ்டிர பாஜக அரசு

27 Oct 2026, 10:21 pm
12,000 விவசாயிகள் ; 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாபெரும் பேரணி போராட்ட எச்சரிக்கைக்கு பணிந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த மகாராஷ்டிர பாஜக அரசு

12,000 விவசாயிகள் ; 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாபெரும் பேரணி போராட்ட எச்சரிக்கைக்கு பணிந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த மகாராஷ்டிர பாஜக அரசு

மும்பைபாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தின் அஹில்யாநகர் மாவட்டம்அகோலேயில் அக்.23 அன்று மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு முறையான நிவாரணம் வழங்கவேண்டும் ; ‘லாட்லி பெஹ்னா’ (மகளிர் நிதியுதவி) பயனாளிகளுக்கான நிதி உதவியை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் பேரணிநடைபெற்றது.

7,000 பேர்விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் என 7,000க்கும் அதிகமானோர் பேரணி மற்றும் அகோலே வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில்,”மாநிலஅரசு கோரிக்கைகள் குறித்து உறுதியான முடிவுகளை எடுக்கவில்லை என்றால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் அகோலேயிலிருந்து மும்பையை நோக்கிப் புறப்படும். விவசாயிகள் வாகனத்தில் பயணித்து முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட்டும், மும்பையில் போராட்டமும் நடத்துவார்கள்” எனதலைவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

வாகனப் பேரணி; நடைப்பயணம்இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை மகாராஷ்டிர பாஜக அரசு கண்டுகொள்ளாததால், திங்களன்று அறிவித்தது போல அகில இந்தியவிவசாயிகள் சங்கம் சார்பில் அகோலேவிலிருந்து மும்பையிலுள்ள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘வர்ஷா பங்களா’வை நோக்கி வாகனப் பேரணிதொடங்கியது. 20 மாவட்டங்களைச் சேர்ந்த 12,000க்கும் மேற்பட்ட விவசாயிகளும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களும் மும்பைநோக்கி பயணித்தன. சில இடங்களில் விவசாயிகள் நடைப்பயணமாகவும் சென்றனர். தேசியநெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் முடங்கின.இந்த வாகனப் பேரணிக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் விஜூகிருஷ்ணன், இணைச் செயலாளர் அஜித் நவாலே, மாநிலத் தலைவர் யஷ்வந்த் ஜாடே, மாநிலச் செயலாளர் உமேஷ் தேஷ்முக், மாநிலத் துணைத்தலைவரும், எம்எல்ஏவுமான வினோத் நிகோலே உள்ளிட்ட தலைவர்கள் தலைமை தாங்கினர்.

அரசு அதிர்ச்சி; பேச்சுவார்த்தைக்கு அழைப்புசெவ்வாய்க்கிழமை கசாரா காட் கணவாய் வழியாக மும்பை நோக்கி வாகனப் பேரணி படையெடுத்துச் சென்றது. விவசாயிகளின் வாகனப் பேரணியால் அதிர்ச்சி அடைந்த மகாராஷ்டிர பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து விவசாயிகள் சங்க மாநிலப் பிரதிநிதிகள் குழு மும்பை மலபார் குன்றில் உள்ள அரசின்‘சஹயாத்ரி விருந்தினர் இல்லத்திற்கு’ சென்றது. மேலும் பேச்சுவார்த்தையின் முடிவுக்காக வாகனப் பேரணி தானே மாவட்டத்திலுள்ள ஷாஹாபூர் பகுதியில் தற்காலிகமாக முகாமிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.