தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகாராஷ்டிராவில் விவசாயக் கடன் தள்ளுபடி நிபந்தனைகளுக்கு எதிராக பெரும் போராட்டம்!

13 Jun 2026, 9:12 pm
மகாராஷ்டிராவில் விவசாயக் கடன் தள்ளுபடி நிபந்தனைகளுக்கு எதிராக பெரும் போராட்டம்!

மகாராஷ்டிராவில் விவசாயக் கடன் தள்ளுபடி நிபந்தனைகளுக்கு எதிராக பெரும் போராட்டம்!

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு அறிவித் துள்ள விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் உள்ள கடுமையான நிபந்தனைகளைத் திரும்பப் பெறக் கோரியும், கோவில் நிலங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நில உரிமை வழங்கும் சட்டத்தை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய பிரம் மாண்ட போராட்டம் நடை பெற்றது.

நிபந்தனை பேரில் ஏமாற்று

கடந்த ஆண்டு விவசாயிகள் சங்கம் நடத்திய தொடர் போராட்டங் களின் விளைவாகவே இந்த கடன் தள்ளுபடி திட்டத்தை முதலமைச் சர் தேவேந்திர பட்நாவிஸ் அரசு அறிவித்தது. ஆனால், இதில் விதிக் கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் லட்சக்கணக்கான விவசாயிகள் வஞ்சிக்கப்படவுள்ளனர். குறிப் பாக, 2019இல் கடன் தள்ளுபடி பெற்று மீண்டும் தகுதி பெற்றுள்ள 12.71 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.50,000 மட்டுமே தள்ளுபடி செய் யப்படும் என்றும், அதற்கு எஞ்சிய கடனை அவர்கள் முதலில் செலுத்த வேண்டும் என்றும் நிபந்த னை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்திய 23.73 லட்சம் விவசாயி களுக்குக் கடன் தள்ளுபடி மறுக் கப்பட்டு, வெறும் ரூ. 50,000 ஊக்கத்தொகை மட்டுமே அறிவிக் கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்தும், நெல், பயிர்க் கடன்கள் மட்டுமின்றி விவசாய உப கரணங்கள், நுண்கடன் (மைக்ரோ பைனான்ஸ்) மற்றும் நகைக் கடன் களையும் தள்ளுபடி செய்யக் கோரி யும் தானே-பால்கர், புனே, நாசிக் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் அரசு உத்தரவு நகல்கள் தீயிட்டுக் கொ ளுத்தப்பட்டு ஆவேச ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. மேலும், இந்துத்துவா அமைப்புகளின் அழுத்தத்தால் முடக்கப்பட்டுள்ள கோவில் (தேவஸ்தான்) நில உரி மைச் சட்ட வரைவை உடனடியாக நிறைவேற்றவும் மாபெரும் முழக் கங்கள் எழுப்பப்பட்டன.

இக்கோரிக்கைகள் தொ டர்பாக, ஜூன் 12 அன்று புனேயில் மாநில வேளாண் அமைச்சர் தத்தா ராய் பரானேவைச் சந்தித்து விவசா யிகள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, டாக்டர் அஜித் நவாலே உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய தூதுக் குழு ஆட்சேபணை மனுவை அளித் துள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் மேலும் தீவிரமாக்கப்படும் என விவசாயிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

(தி லெப்ட் வியூஸ்)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.