தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“போக்குவரத்து நெரிசலுக்கு காட்டும் அக்கறையை விவசாயிகளின் இழப்புகளுக்கும் காட்ட வேண்டும்”

11 Jul 2026, 8:36 pm
“போக்குவரத்து நெரிசலுக்கு காட்டும் அக்கறையை விவசாயிகளின் இழப்புகளுக்கும் காட்ட வேண்டும்”
<p><strong>“போக்குவரத்து நெரிசலுக்கு காட்டும் அக்கறையை விவசாயிகளின் இழப்புகளுக்கும் காட்ட வேண்டும்”</strong> </p><p>மும்பை-புனே விரைவுச் சாலையில் நிலச்சரிவு கார ணமாக ஏற்பட்ட போக்கு வரத்து நெரிசலுக்கு அரசு காட்டும் அதே துரிதமான அக்கறையை, மழை யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் இழப்புகளுக்கும் காட்ட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில வெங்காய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் பாரத் திகோலே வெளியிட்டுள்ள அறிக்கையில்,”நகரங்களில் சில மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித் தாலே, ஒட்டுமொத்த மாநிலமும் அதைக் கவனித்து நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், கனமழை, ஆலங்கட்டி மழை, வெள்ளம் அல்லது வறட்சியால் விவசாயி களின் பயிர்கள் முற்றிலும் அழியும் போது, அந்த அளவுக்கு அக்கறை காட்டப்படு வதில்லை. விவசாயிகள் பயிர் நோய்கள், சீரற்ற வானிலை, விலைச் சரிவு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் எனப் பல சவால்களை எதிர்கொண்டு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பைச் சந்திக்கின்றனர். ஆனாலும், அவர்கள் மனம் தளராமல் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார்கள். விரைவுச்சாலைகள், பாலங் கள், சுரங்கப்பாதைகள் போன்றவை விவ சாயிகளுக்கும் பயனுள்ளவை. வெங்கா யம், காய்கறிகள், பழங்கள் போன்ற அழுகக்கூடிய விவசாயப் பொருட்க ளைச் சந்தைக்கு விரைவாகக் கொண்டு செல்ல, சிறந்த போக்குவரத்து உள்கட்ட மைப்பு மிகவும் அவசியம். மகாராஷ்டிர மாநிலத்தின் வளர்ச்சி க்கு நகரங்களும் கிராமங்களும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. நகர வாசிகள் எதிர்கொள்ளும் போக்குவரத்து சிரமங்களுக்கு எந்த அளவுக்கு அரசு செவிசாய்க்கிறதோ, அதே அளவுக்கு விவசாயிகளின் துயரங்களுக்கும் அரசு உண்மையான அக்கறையுடன் செவி சாய்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.