தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொடரும் உழவர் துயரமும் ஆட்சியாளர்களின் ஆணவமும்!

30 Oct 2026, 9:01 pm
தொடரும் உழவர் துயரமும் ஆட்சியாளர்களின் ஆணவமும்!

தொடரும் உழவர் துயரமும் ஆட்சியாளர்களின் ஆணவமும்!

வறட்சியின் பிடியில் சிக்கி, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மகாராஷ்டிர மாநிலவிவசாயிகளின் நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்துள்ளது அம்மாநில ஆளும் கூட்டணியைச் சேர்ந்த சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட்டின் அநாகரிகப் பேச்சு.

“தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் இறுதிச்சடங்கில் யாரும் பங்கேற்கக் கூடாது; விலங்குகள் வந்து அவர்களின் உடலைத்தின்னும்போதுதான், மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்” என்று அவர் பேசியிருப்பது ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே உலுக்கியுள்ளது.

கடின உழைப்பால் நாட்டின் பசி போக்க உணவளிக்கும் உழவர் பெருமக்களைப் பார்த்து, “விலங்குகளுக்கு இரையாக வேண்டும்” என்று சாபமிடும் மனநிலை, ஆளும்வர்க்கத்தின் மனிதாபிமானமற்ற கொடூர முகத்தையே காட்டுகிறது. பிரச்சனைகள் இருந்தால் அரசிடமோ, மக்கள் பிரதிநிதிகளிடமோ செல்ல வேண்டும் என்று கூறும் கெய்க்வாட்,அரசின் சீர்கேட்டினால் எழும் தற்கொலைகளுக்கு விவசாயிகளையே குற்றவாளியாக்க முயல்கிறார்.

உண்மையில், விவசாயிகள் யாரும் ஆசையிலோ அல்லது அகந்தையிலோ தற்கொலை செய்துகொள்வதில்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் நிகழும் விவசாயத் தற்கொலைகளில் மகாராஷ்டிர மாநிலமேதொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.

சமீபத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டப் புள்ளிவிவரங்களின்படி, 2022 ஜனவரி முதல் 2026 ஜூன் வரையிலான 54 மாதங்களில் மட்டும்மகாராஷ்டிராவில் 13,928 விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்டுள்ளனர். அதாவது, அங்கு தினமும் சராசரியாக 8-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சி, பயிர் இழப்பு மற்றும் கடன் சுமையால் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், 2026ஆம்ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் மராத்வாடா பகுதியில் 465 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

கடும் வறட்சியால் பயிர்கள் கருகிய நிலையில், ஹெக்டேருக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகளும் விவசாயிகள் சங்கங்களும் வலியுறுத்தின. ஆனால், அம்மாநில அரசோ வெறும் ரூ. 5,000மட்டுமே நிவாரணமாக அறிவித்து அவர்களின் புண்ணில் ஈட்டியைப் பாய்ச்சியது.

ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கிய கெய்க்வாட்டின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தும், மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்சும், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயும் மௌனம் காப்பது வேதனையானது.

மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பை மறந்து, சாகத் துணியும் விவசாயிகளின் வேதனையைக் கேலி செய்யும் ஆளும்கட்சியினரின் இந்த இறுமாப்பு மன்னிக்க முடியாதது. வெறும் அறிக்கைகளோடும் மௌனத்தோடும் கடந்து செல்லாமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி, அவர்களின் கண்ணீரைத் துடைப்பதேஒரு பொறுப்புள்ள அரசுக்கான கடமையாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.