தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

1 Sept 2026, 9:21 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி ரூ.75 லட்சம் மதிப்புள்ள காலாவதி உணவுப் பொருட்கள் பறிமுதல்

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பையில் கடந்த ஒருவரமாக நடத்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு நடவடிக்கையில் காலாவதி தேதிகள் முடிவடைந்தும்பொருட்கள் விற்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

இந்த சோதனையின் போது பறிமுதல்செய்யப்பட்ட பொருட்களில் லேஸ் கிளாசிக் சால்டட், மேஜிக் மசாலா, ஸ்பானிஷ் டாங்கி டொமேட்டோ, சிஸ்லிங்ஹாட் மற்றும் லெமன் சில்லி வகைகள் அடங்கும். அதே போல மசாலா மன்ச், ரெட் சில்லி சட்டாக்கா, நாட்டிடொமேட்டோ, சாலிட் மஸ்தி, கிரீன் சட்னி, ஷெஸ்வான் சட்னி, பாப்கார்ன், யம்மி சீஸ் உள்ளிட்ட பலகுர்குரே தயாரிப்புகளும் காணப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் அறிவிக்கப்பட்ட மதிப்பு ரூ.75,21,269 ஆகும். மேலும் நடவடிக்கையின்போது, ​​10 ஏற்றுமதி நிறுவனங்களுடன் தொடர்புடைய 8,442 அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெயரில் ம.பி.யில் பண மோசடி

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி

வரும் ஒரு கும்பல், தங்களை தமிழ்நாடுமுதலமைச்சர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் பேசியுள்ளனர். விஜய் மூலம் சிறு தொழில் தொடங்குவதற்கான மானியக் கடன், இலவச நிதியுதவி, கல்வி நிதியுதவிமற்றும் வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறுசலுகைகள் வழங்கப்படுவதாக ஆசை வார்த்தைகள் கூறி மக்களை நம்ப வைத்துள்ளனர்.

அதாவது, இந்த போலி அறக்கட்டளை மூலமாக ரூ.10 லட்சம் வரைமானியம் மற்றும் நிதி உதவி பெற முடியும் எனக் கூறி மக்களைத் தொடர்புகொண்ட அந்த கும்பல், அதற்கான நடைமுறைகளுக்காக பணம் பறித்துள்ளது. விண்ணப்பப் பதிவு, ஆவணச் சரிபார்ப்புமற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கான கட்டணம் என்ற பெயரில் தலா ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை ஆன்லைன்பரிவர்த்தனை வாயிலாக வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பணம் செலுத்திய பிறகு குறிப்பிட்ட நபர்களைத்தொடர்புகொள்ள முடியாமலும், எவ்வித நிதியுதவியும் கிடைக்காமலும் போனதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதைஉணர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல்நிலையத்தை நாடியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.