தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆசிரியர் தேர்வு முறைகேடு மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம், வெளிநடப்பு

29 Jun 2026, 8:48 pm
ஆசிரியர் தேர்வு முறைகேடு மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம், வெளிநடப்பு

ஆசிரியர் தேர்வு முறைகேடு மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம், வெளிநடப்பு

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தற்போது மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் ஜூலை 10 அன்று நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், திங்களன்று அவை கூடியதும் மகாராஷ்டிர மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடு தொடர்பாக விளக்கம் மற்றும் சட்டப்பேரவையில் விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு வழக்கம் போல விளக்கம் அளிக்காமல் அலட்சியமாக இருந்தது. இதனால் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சட்டப்பேரவை படிக்கட்டுகளில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் எம்எல்ஏ நானா படோலே சட்டப்பேரவை வாயிலில் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பின் போது கூறுகையில், “மகாராஷ்டிர மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு, நீட் வினாத்தாள் கசிவுச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள நபர்களுக்கு பாஜக வுடன் தொடர்பு உள்ளது. பாஜகவின் அழுத்தம் இல்லாமல் நாட்டில் எந்த முறைகேடும் அரங்கேற வாய்ப்பில்லை. இதனால் மகாராஷ்டி ராவில் தேர்வு நடத்தும் முறை குறித்தும் ஒரு விரிவான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். முறைகேடுகள் குறித்து, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.