மகாராஷ்டிராவில் மெகா ஊழல்? அதானி மின்திட்டச் செலவு 99% குறைப்பு
13 Nov 2026, 10:30 pm
<p><strong>மகாராஷ்டிராவில் மெகா ஊழல்? அதானி மின்திட்டச் செலவு 99% குறைப்பு</strong></p><p>பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 1,500 மெகாவாட் நீர்மின் திட்டம் தொடங்க உள்ளது. இந்ததிட்டம் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட ரூ.5,675 கோடியிலிருந்து தற்போது ரூ.56.75 கோடியாக (99% குறைவாக)மாற்றி அமைக்கக் கோரியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. </p><p>அதானிக்காக திட்டச் செலவு குறைக்கப்பட்டால், வனவிலங்கு சரணாலயப் பாதுகாப்புக்காக அதானி நிறுவனம் அரசுக்குச் செலுத்த வேண்டிய நிதியும் ரூ.227 கோடியிலிருந்து வெறும் ரூ.2.27 கோடியாகக் குறையும். இதுகுறித்துப் பிரதமர் மற்றும் மகாராஷ்டிரமுதலமைச்சரின் குறைதீர் இணையதள ங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னுரிமைஅடிப்படையில் விசாரணை நடத்துமாறு மாநில வனத்துறைக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் மழுப்பலாக உத்தரவிட்டுள்ளது.</p>
