தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகாகவி பாரதியாரின் 144 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

11 Dec 2025, 5:47 pm
மகாகவி பாரதியாரின் 144 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
<p><strong>மகாகவி பாரதியாரின் 144 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்</strong></p> <p>தருமபுரி, டிச.11- மகாகவி பாரதியாரின் 144 ஆவது &nbsp;பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அமைப்பினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பாரதியார் பிறந்த நாள் விழாவை &nbsp;முன்னிட்டு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் சார்பில், வியாழனன்று தருமபுரி &nbsp;பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு &nbsp;வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுகந்தி பாஸ்கரன் தலைமை வகித் தார். இதில் புலவர் நாகை பாலு, &nbsp;சங்கத்தின் மாவட்டச் செயலாளர் &nbsp;வே.விஸ்வநாதன், துணைத்தலை வர் கே.பகத்சிங், துணைச்செயலா ளர் செல்வி சாரா, பொருளாளர் &nbsp;கிருஷ்ணமூர்த்தி, மாற்றுத்திறனாளி கள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மாரிமுத்து, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் பி.கிருஷ்ணன், மாதர் சங்க நிர் வாகிகள் மீனாட்சி, ரங்கநாயகி, பழனி &nbsp;உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதேபோன்று, அரூர் ரவுண் டானா அம்பேத்கர் சிலை அருகே பாரதி-யின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு கலை இலக்கி யப் பெருமன்ற மேனாள் பொதுச் செயலாளர் இரவீந்திர பாரதி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் கே.சின்ன கண்ணன், தமுஎகச &nbsp;மாநிலக்குழு உறுப்பினர் செந்தில் &nbsp;ஆகியோர் முன்னிலை வகித்தனர். &nbsp;இதில் தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதிமுதல்வன், தொழி லதிபர் எஸ்.ராசேந்திரன், இரா.திரு வேங்கடம், வழக்குரைஞர் ராம மூர்த்தி, ஆசிரியர் பயிற்றுநர் ராஜ பிரபு உட்பட பலர் கலந்து கொண்ட னர். &nbsp;ஈரோடு ஈரோடு, கருங்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், பாரதியார் இறுதியாக பேசினார் என்று கூறப் படுகிறது. இந்நினைவாக அவருக்கு அங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.