தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“நிலத்தை இழந்தோம்; நியாயமான கூலியும் இழந்தோம்”

3 Jun 2026, 9:07 pm
“நிலத்தை இழந்தோம்; நியாயமான கூலியும் இழந்தோம்”

“நிலத்தை இழந்தோம்; நியாயமான கூலியும் இழந்தோம்”

அனகாபள்ளி மகா சிமெண்ட் ஆலை தொழிலாளர் போர்க்குணமிக்க எழுச்சி

வேலைநிறுத்தம் 48

அனகாபள்ளி, ஜுன் 3 - ஆந்திரப் பிரதேசத்தின் நெல் லூர் எஸ்இஐஎல் மின் ஆலைத் தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, அம்மாநி லத்தின் மற்றொரு முக்கியத் தொழிற் பேட்டை மாவட்டமான அனகா பள்ளியிலும் தொழிலாளர்களின் வர்க்க எழுச்சி வெடித்துள்ளது. அனகா பள்ளி மாவட்டம் எலமஞ்சிலி (Yelamanchili) மண்டலம் முல கலபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ‘மை ஹோம் இண்டஸ்ட்ரீஸ்’ (My Home Industries) நிறுவனத்திற்குச் சொந்தமான புகழ்பெற்ற ‘மகா சிமெண்ட்’ (Maha Cement) ஆலை யின் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் மே 26, 2026 முதல் தங்களின் அதிரடி வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ளனர்.

ஆலையின் பிரதான வாயில் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான தினக்கூலி ஒப்பந்தத் தொழி லாளர்கள், உழைப்புச் சுரண்டல் மற்றும் மனிதநேயமற்ற பணிச்சூழ லுக்கு எதிராக மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்தி வருவதால் சிமெண்ட் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது. இவ்வாலையில் 3 முதல் 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களின் உழைப்பை அர்ப்பணி த்த போதிலும், தங்களை இன்னமும் ஆரம்பக்கட்ட ஊழியர்களைப் போலவே நடத்தி வரும் நிர்வாகத்தின் பிடிவாதத்திற்கு எதிராகத் தொழிலா ளர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

வெறும் 9 ரூபாய் ஊதிய உயர்வும்; அப்பட்டமான வர்க்கத் துரோகமும்

அயர்லாந்து நாட்டின் ‘சிஆர்எச்’ (CRH plc) நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் இயங்கி வரும் மகா சிமெண்ட் ஆலை, அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் தென் னிந்திய மற்றும் கிழக்கு இந்தியச் சந்தைகளில் முன்னணி இடத்தைப் பிடித்துப் பெரும் லாபம் ஈட்டி வரு கிறது. ஆனால், மாநில அரசின் அகவிலைப்படிப் புள்ளிகள் உயர்ந்த போதிலும், இங்குள்ள தொழி லாளர்களின் அடிப்படை ஊதியம் பல ஆண்டுகளாக மாற்றமின்றி உறைந்து கிடக்கிறது. தற்போது ஆலையில் நாள் ஒன்றுக்குத் திறனற்ற தொழிலாளர்களுக்கு (Unskilled) ₹470, பகுதித் திறன் கொண்டவர்களுக்கு (Semi-skilled) ₹560, மற்றும் திறன் கொண்ட தொழில்நுட்பத் தொழி லாளர்களுக்கு (Skilled) ₹703 மட்டுமே தினக்கூலியாக வழங்கப்பட்டு வஞ்சிக்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளாக எவ்வித ஊதிய மாற்றமும் இல்லாத நிலை யில், ஜூன் மாதம் முதல் நாள் ஒன்றுக்கு வெறும் 9 ரூபாய் மட்டுமே உயர்த்துவதாக ஆலை நிர்வா கம் அண்மையில் தன்னிச்சையாக அறிவித்தது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஒப்பந்த தாரர்கள் தரப்பில் 15 ரூபாய் உயர்த்துவதாகக் கூறப்பட்ட போதி லும், இந்த ஏமாற்று வித்தையைத் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்துப் போராட்டத்தில் குதித்தனர்.

நிலத்தை இழந்த விவசாயக் குடும்பங்களின் குமுறல்கள்

ஆலை வாயிலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதல் மாலை வரை தார்மீகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தங்களின் ஆதங்கங்களை ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டனர்.

“இந்த மகா சிமெண்ட் ஆலை அமைப்பதற்காக எங்களின் விளைநிலங்களை வழங்கிவிட்டு, இன்று குறைந்தபட்சக் கூலிக்காக நாங்கள் தெருவில் நிற்கிறோம். நாங்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்தாலும் எங்களின் ஊதிய மும் மாறுவதில்லை; வாழ்வாதார அந்தஸ்தும் உயர்வதில்லை. நிர்வாகத்திற்குத் தங்களின் லாபம் மட்டுமே முக்கியமா, தொழி லாளர்களின் வியர்வைக்கு மதிப்பில்லையா?” என்று மூத்த தொழிலாளி ஒருவர் குமுறினார்.

மேலும், ஆலை தொடங்கப்பட்ட காலம் முதலே ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கு ஆண்டு போனஸ் வழங்கப்படவில்லை என்றும், விபத்துகளுக்கு உள்ளாகும் தொழிலாளர்களுக்கு மருத்துவ விடுப்போ அல்லது மருத்துவச் சிகிச்சைகளுக்கான முழு ஊதியமோ வழங்கப்படுவதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

தொழிலாளர்களின் 10 அம்சக் கோரிக்கை சாசனம்

‘வேலை இல்லை எனில் கூலி இல்லை’ (No work, no pay) என்ற அநீதியான சுரண்டல் முறையை ஒழித்து, முறையான மாதாந்திர ஊதிய அமைப்பை அமல்படுத்தக் கோரி தொழிலாளர்கள் கோரிக் கைகளை முன் வைத்துள்ளனர்.

தீவிரமடையும் வர்க்க விழிப்புணர்வு

இப்போராட்டம் குறித்து மகா சிமெண்ட் நிர்வாகம் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறி விப்பையும் வெளியிடாமல் மௌ னம் காத்து வருகிறது. எனினும், தங்களின் கோரிக்கைகள் அனை த்தும் முழுமையாக நிறைவேற்றப் படும் வரை ஆலைக்குள் வேலை க்குத் திரும்பப் போவதில்லை என்பதில் தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தின் சிமெண்ட் மற்றும் உற்பத்தித் துறைகளில் நிலவி வரும் தற்காலிக ஒப்பந்த முறை, ஊதியத் தேக்கம் மற்றும் சட்டப்பூர்வ சலுகைகள் மறுப்பு ஆகியவற்றுக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் தன்னெழுச்சி யாகவும், திட்டமிட்ட ரீதியிலும் அணிதிரண்டு வருவதையே எலமஞ்சிலி மகா சிமெண்ட் ஆலை வேலைநிறுத்தம் காட்டுகிறது. அடித்தட்டுத் தொழிலாளர்களின் கூட்டுப் போராட்டமே தங்களின் வாழ்வாதாரத்தையும் உரிமை களையும் பாதுகாக்கும் ஒரே ஆயுதம் என்பதை இப்போராட்டம் மீண்டும் நிலைநாட்டியுள்ளது. தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.