ஒழுங்கு நடவடிக்கை வளையத்தில் ‘உலக சாம்பியன் கார்ல்சன்’
42 minutes before

ஒழுங்கு நடவடிக்கை வளையத்தில் ‘உலக சாம்பியன் கார்ல்சன்’

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் ‘டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட் 2026’ தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 5 முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் (நார்வே) 3 ஆட்டங்களில் விளையாடாமல் விட்டுக்கொடுத்துள் ளார். விளையாட்டுத் துறையில் போட்டியில் கலந்து கொள்ள பெயர் அளித்தால், கண்டிப்பாக விளையாட வேண்டும். தவிர்க்க முடியாத அல்லது காயம் காரணமாக மட்டுமே போட்டியை தவிர்க்க முடியும். இல்லையென்றால் கடும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.

ஆனால் கார்ல்சன் காயம் உள்ளிட்ட எவ்வித சூழலும் இல்லாமல் 3 போட்டிகளை விளையாடாமல், போட்டிக் களத்தை விட்டு வெளியே சென்றுள்ளார்.விளையாடாமல் விட்டுக்கொடுக்கப்பட்ட ஆட்டங்கள் முன்னணி வீரர்களின் தரவரிசைப் புள்ளிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கார்ல்சன் சம்பவம் தொடர்பாக சர்வதேச செஸ் சம்மேளன தலைவர் திமூர் துர்லோவ், துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ”கார்ல்சனின் செயல்பாடு தொழில்முறை செஸ் விளையாட்டிற்குப் பெரும் கவலையளிக்கிறது. இத்தகைய நடத்தை நியாயமான ஆட்டக் கோட்பாடுகளை யும், போட்டியின் நேர்மையையும் சிதைக்கிறது. உயர்மட்டத் தொழில்முறை செஸ் போட்டிகளில் இதுபோன்று எந்த நிகழ்வும் நடந்ததில்லை. அதே சமயம் அதிகாரப் பூர்வப் போட்டிகளில் எதிர்பார்க்கப் படும் தொழில்முறைத் தரத்திற்கு இதுசரியானது இல்லை என்பதால், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் செஸ் போட்டிகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதோடு, சக போட்டியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் தொடரின் பங்குதாரர்கள் மீது மரியாதை யின்மையை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. அதனால் இந்தச் சம்பவம் நடத்தை விதிகளை மீறியுள்ளதா என்பதை சுதந்திரமாக ஆய்வு செய்வதற்காக, இதுதொடர்பான ஆவணங்களை செஸ் நெறிமுறை மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்” என அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒழுங்குநடவடிக்கை வளையத்தில் ‘உலக சாம்பியன் கார்ல்சன்’ சிக்கியுள்ளார்.