மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும் - தமிழ்நாடு அரசு
14 May 2026, 10:57 am
<p>இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>அறிக்கையில் கூறியிருப்பதாவது;</p><p>பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.</p><p>மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது</p>
