முந்தய பக்கம்

மகளிர் உரிமைத்தொகை ரூ. 1,000 வரவு வைப்பு!

15 May 2026, 10:05 pm
மகளிர் உரிமைத்தொகை ரூ. 1,000 வரவு வைப்பு!
<p><strong>மகளிர் உரிமைத்தொகை ரூ. 1,000 வரவு வைப்பு!</strong></p><p>சென்னை, மே 15 - மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வெள்ளிக்கிழமை (மே 15) அன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மகளிர் உரிமைத் தொகை 2,500 ரூபாயாக உயர்த்தப் படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித் திருந்தார். அதன்படி தற்போது அவர் முத லமைச்சரான நிலையில், 2,500 வழங்கப்படு வது எப்போது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதுவரை திமுக அரசு கொண்டுவந்த ரூ.1000 மாதாந்திர மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடருமா என்ற சந்தேகங்களும் மக்களுக்கு எழுந்தன. மகளிர் உரிமைத் தொகை திட்டம் மறுசீரமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த நிலையில், இது பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரூ. 1000 உதவித் தொகையை உடனடியாக வங்கிக் கணக்கில் வரவுவைக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டா லினும், ரூ. 2,500 உதவித்தொகை உயர்வு வாக்குறுதியை முதலமைச்சர் விஜய் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 1 கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில், வழக்கம்போல ரூ. 1,000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram