தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறையிலிருந்து மதுரோவின் அறைகூவல் : “நாங்கள் போராளிகள், வெனிசுலா வீழாது!”

17 Jan 2026, 2:42 pm
சிறையிலிருந்து மதுரோவின் அறைகூவல் : “நாங்கள் போராளிகள், வெனிசுலா வீழாது!”
<p><strong>சிறையிலிருந்து மதுரோவின் அறைகூவல் : &ldquo;நாங்கள் போராளிகள், வெனிசுலா வீழாது!&rdquo;</strong></p> <p>அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேரடி ராணுவ ஆக்கிரமிப்பால் கடத்தப் பட்டு, நியூயார்க்கின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெனிசுலா ஜனா திபதி நிக்கோலஸ் மதுரோ, அங்கிருந்து தனது முதல் செய்தியை உலகுக்கு அனுப்பியுள்ளார். வெறும் ஐந்து சொற்களில் அமைந்த அந்தச் செய்தி, இன்று வெனிசுலாவின் மூலைமுடுக் கெல்லாம் ஒரு புரட்சிகர அறைகூவலாக எதிரொ லிக்கிறது: &ldquo;நாங்கள் நலமாக இருக்கிறோம்; நாங்கள் போராளிகள்!&rdquo; (We are well, we are fighters). நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் (MDC Brooklyn) அடைக் கப்பட்டுள்ள மதுரோ, தனது மகன் மூலம் அனுப்பிய செய்தியில், தங்களை எவ்வித அச்சு றுத்தலாலும் உடைக்க முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். &ldquo;அவர்களால் எங்களை எந்த வழியிலும் தோற்கடிக்க முடிய வில்லை, அதனால் ராணுவ பலத்தைப் பயன் படுத்திக் கடத்தியுள்ளனர். ஆனால், இப்போதும் அவர்கள் எங்களை வீழ்த்தவில்லை&rdquo; என்று மதுரோவின் மகன் நிக்கோலஸ் மதுரோ குவேரா தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி வெளியான சில மணிநேரங்க ளிலேயே, வெனிசுலாவின் 23 மாநிலங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். &ldquo;எங்கள் தலை வர்களைத் திருப்பித் தா!&rdquo; என்ற முழக்கம் காரகஸ் நகரெங்கும் அதிர்கிறது. டெல்சி ரோட்ரிக்ஸ்: தற்காலிக ஜனாதிபதியின் நெஞ்சுரம் ஜனாதிபதி மதுரோ இல்லாத சூழலில், வெனிசுலா உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறார். &ldquo;வெனிசுலாவை யார் ஆள்கிறார் கள்? மக்கள் அதிகாரம் ஆள்கிறது. இங்கே ஆட்சி மாற்றம் நடந்துவிட்டதாக அமெரிக்கா சொல்லும் பொய்களை நம்பாதீர்கள். மதுரோ வின் அரசாங்கமே இப்போதும் தொடர்கிறது&rdquo; என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். வெனிசுலாவின் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது மற்றும் அமெரிக்காவின் பொரு ளாதாரத் தடைகளை முறியடிப்பது ஆகிய மது ரோவின் கடைசி உத்தரவுகளைத் தான் நிறை வேற்றப் போவதாக அவர் சபதமேற்றுள்ளார். குறிப்பாக, கம்யூன்களின் (Communes) உற் பத்தியை அதிகரிப்பதன் மூலம் அமெரிக்கா வின் டாலர் அரசியலை முறியடிக்க அவர் அழைப்பு விடுத்துள்ளார். மதுரோவின் வழக்கறிஞர் பேரி போலக், அமெரிக்க நீதிமன்றத்தில் அவரை மீட்ப தற்கான சட்டப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ளார். மார்ச் 17-ஆம் தேதி அடுத்த கட்ட விசாரணை நடைபெறவுள்ளது. இதனிடையே, உலகம் முழுவதும் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகள் மதுரோ விற்கு ஆதரவாகத் திரண்டுள்ளன. நியூயார்க் கில் உள்ள சிறைச்சாலைக்கு முன்பாக மக்கள் தினசரி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரு கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.