மதுராந்தகம் நகருக்குள் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி
13 May 2026, 2:33 am
<p><strong>மதுராந்தகம் நகருக்குள் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி </strong></p><p>மதுராந்தகம், மே 12- மதுராந்தகம் நகரின் முக்கியப் பகுதியான ஜிஎஸ்டி சாலையில் நில வும் கடும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாண வர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் இன்னல்க ளுக்கு ஆளாகி வருகின்ற னர். குறுகிய சாலைகள் கொண்ட இப்பகுதியில், பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் கனரக வாகனங்கள் மற்றும் கல்குவாரி லாரிகள் அனு மதிக்கப்படுவதே இந்த நெரி சலுக்கு முக்கியக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மழைநீர் கால்வாயின் மேல் பொது மக்களுக்காக அமைக்கப் பட்ட நடைபாதைகளை வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதாலும், காவல் நிலையத்தின் முன்பு பறிமுதல் செய்யப் பட்ட வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ள தாலும் மக்கள் சாலையி லேயே நடக்க வேண்டிய சூழல் உள்ளது. இது குறித்து போக்குவரத்து போலீஸார் கூறுகையில், நகருக்குள் காலை 8 முதல் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் கனரக வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும், விதியை மீறும் வாகனங்களுக்கு ரூ.7ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். எனினும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உயர் அதிகாரிகள் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
