தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பறை இசை முதல் ராப் பாடல் வரை… மதுராந்தகத்தில் கலைக்குழுக்கள் கலக்கல் பிரச்சாரம் வேட்பாளர் பா.சுகந்திக்கு ஆதரவு அமோகம்

4 Oct 2026, 1:27 am
பறை இசை முதல் ராப் பாடல் வரை… மதுராந்தகத்தில் கலைக்குழுக்கள் கலக்கல் பிரச்சாரம் வேட்பாளர் பா.சுகந்திக்கு ஆதரவு அமோகம்

பறை இசை முதல் ராப் பாடல் வரை… மதுராந்தகத்தில் கலைக்குழுக்கள் கலக்கல் பிரச்சாரம் வேட்பாளர் பா.சுகந்திக்கு ஆதரவு அமோகம்

மதுராந்தகம் (தனி) தொகுதியில் வரும் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆண்ட கட்சிகளும், ஆளும் கட்சியும் பணத்தை தண்ணீராக செலவழித்துக் கொண்டிருக்கின்றன. இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி. சுகந்தி மக்களை நம்பி களத்தில் நிற்கிறார். அவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பா.சுகந்திக்கு ஆதரவாக கலைக்குழுக்களும் களத்தில் இறங்கி உள்ளன. மதுராந்தகம், அச்சரப்பாக்கம், கருங்குழி, மெய்யூர், சித்தாமூர், மேல்மருவத்தூர், புதுப்பட்டு, கரிகிலி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் கலைக்குழுக்களின் பிரசாரம் களைகட்டி வருகிறது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட செங்கை போர் பறை கலைக்குழு, புதுச்சேரியைச் சேர்ந்த சப்தர்ஹஸ்மி கலைக்குழு, பெண்மை போற்றும் கலைக்குழு, ‘காம்ரேட் கேங்ஸ்டர், தனிப்பாடகர்கள் என்று மதுராந்தகம் தொகுதி முழுவதும் மார்க்சிய மதுர கானம் இசைத்து வருகின்றனர்.

அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்தில் முத்திரையிட்டு என்று கலைக்குழுவினர் ஆரம்பித்து வைக்க… நம் அன்புத் தோழர் சுகந்திக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பார்வையாளர்கள் தொடர்கின்றனர். அந்த அளவிற்கு சின்னத்தையும், வேட்பாளர் பெயரை யும் சென்ற இடத்தில் எல்லாம் கலைக்குழுவினர் அறிமுகப்படுத்தி செல்கின்றனர்.

நாட்டுப்புற பாடல்களோடு, நகர நாகரீகத்தின் சாயலும் சேர்ந்த பாடல்களைப் பாடுவதால், பிரச்சார இடத்தை கடந்து செல்பவர்களும் காது கொடுத்து கேட்டபடி செல்கிறார்கள்.

அரை மணி நேரம் கருத்துப் பிரச்சாரம் செய்வதைவிட ஐந்து நிமிட கானம், கருத்துக்களை எளிதாக கொண்டு சேர்த்துவிடுவதோடு, இசை அந்தக் கருத்துக்களை மனதில் பதிய வைத்து விடுகிறது.

கலைக்குழுக்களின் பிரசாரத்தில் குரோதமோ தனி மனித விரோதமோ இல்லை. மக்களின் பிரச்சனைகளை சொல்கிறது. பிரச்சனைகளை தீர்க்க மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடுவதை சொல்கிறது.

மதுராந்தகம் தொகுதி மக்களின் குரலை சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் தகுதி உள்ள வேட்பாளர் பா.சுகந்திதான் என்று ஆரவார மில்லாமல் அடித்துச் சொல்கிறது. மற்றக் கட்சி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டால், சட்டப்பேரவையில் அவர்கள், தலைவர்கள் துதியை பாடு வார்கள்; தனி மனித வெறுப்பை கக்கு வார்கள் என்று கலைக்குழுக்கள் கனிவாகப் பிரச்சாரம் செய்கின்றன.

பறை… பறை… பறை…

வேட்பாளர் செல்லும் வாகனத்துடன் பயணிக்கும் ‘‘பெண்மை போற்றும் கலைக்குழுவினர் ’’, தினந்தோறும் வேட்பாளர் சுகந்தியுடன் பறை இசைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர் செல்லும் பகுதிகளில் அவருடைய வாகனத்திற்கு முன்பே சென்று இறங்கி, ‘‘ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ குல திலக, ராஜ பராக்ரம’’ என்று மற்ற கட்சியினர் போல் கட்டியம் கூறுவதில்லை. ‘‘உங்கள் பிரச்ச னைகளைப் பற்றிப் பேச, உங்கள் கோரிக்கைகளுக்காகப் போராட, மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பா.சுகந்தி வருகிறார் என பக்குவமாக அதே நேரத்தில் உரக்கப் பறை இசைத்து சொல்கிறார்கள்.

கலக்கும் ‘காம்ரேட் கேங்ஸ்டர்’இணையத்தில் பிரபலமான ‘காம்ரேட் கேங்ஸ்டர்’ராப் இசைக்குழு மூலம் உருவாக்கப்பட்ட வேட்பாளர் சுகந்திக்கான பிரச்சாரப் பாடலும் மதுராந்தகம் தொகுதியை ஒரு கலக்கு கலக்கி வருகிறது. அதோடு, பொதுக்கூட்ட மேடைகளிலும் ‘காம்ரேட் கேங்ஸ்டர்’ராப் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர். தேர்தல் பிரச்சார முழக்கங்களை இசையுடன் இணைத்துமேடையில் அரங்கேற்றுவதை அனைவரும் பார்த்து ரசிக்கின்றனர்.இதுதவிர, பல்வேறு பகுதிகளில் பாடகர்கள் அன்புமணி, உமா, செந்தில், சேகர், விநாயகம், கவிசேகர், செல்வம், பிரவீன்உள்ளிட்ட தனிப் பாடகர்களும், தவில் கலைஞர்களும் பா.சுகந்திக்கு ஆதரவாக பாடல்கள் பாடி பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

யார் யாரோ வந்தாங்க…என்ன செஞ்சி கிழிச்சாங்க…

மார்க்சிஸ்ட் கட்சிதான்மக்களோட நிக்குதுங்க…மக்கள் பிரச்சனையை பேசுதுங்க…ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க

உங்க பிரச்சனைகள் தீருமுங்கஎன்ற பொருள்பட கலைக்குழுக்கள் செய்யும் பிரச்சாரம் மதுராந்தகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பாரம்பரியமான பறை இசை முதல் நவீன ராப் இசை வரை பல்வேறு கலை வடிவங்களைப் பயன்படுத்தி செய்யப்படும்பிரச்சாரம் வேட்பாளர் பா.சுகந்தியை மதுராந்தகம் மக்களோடு நெருக்கமாக்கி உள்ளது. என்றால் மிகையில்லை.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.