மதுராந்தகத்தில் 85.99%, தாராபுரத்தில் 80.31%, தட்டாஞ்சாவடியில் 80.81% வாக்குகள் பதிவு பொதுத்தேர்தலை விட குறைந்த வாக்குப்பதிவு சதவிகிதம்
6 Oct 2026, 10:23 pm

மதுராந்தகத்தில் 85.99%, தாராபுரத்தில் 80.31%, தட்டாஞ்சாவடியில் 80.81% வாக்குகள் பதிவு

பொதுத்தேர்தலை விட குறைந்த வாக்குப்பதிவு சதவிகிதம்

சென்னை, அக். 6 -மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் செவ்வாய்க்கிழமை அமைதியாக நடைபெற்று முடிந்தது.

இதில், மதுராந்தகத்தில் 85.99 சதவிகிதம், தாராபுரத்தில் 80.31 சதவிகிதம், தட்டாஞ்சாவடியில் 80.81 சதவிகிதம் என வாக்குகள் பதிவாகின. பொதுத்தேர்தலில் மதுராந்தகத்தில் 93.22 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், அதிலிருந்து தற்போது 7.23 சதவிகிதமும், தாராபுரத்தில் 88.53 சதவிகிதம் பதிவாகி இருந்த நிலையில், தற்போது 8.22 சதவிகிதமும், தட்டாஞ்சாவடியில் 87.23 சதவிகிதம் பதிவாகி இருந்த நிலையில் தற்போது 6.52 சதவிகிதமும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி. சுகந்தி, தவெக-வின் மரகதம் குமரவேல், திமுகவின் இ. பரந்தாமன், அதிமுகவின் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சியின் ஜானகிராமன் உள்ளிட்ட 27 பேர் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியபோதும், பொதுத்தேர்தலைப் போல் கூட்டம் காணப்படவில்லை. குறிப்பாக இளைஞர்களின் ஆர்வம் குறைந்திருந்தது. காந்தி நகரில் உள்ள சிஎஸ்ஐ தனியார் பள்ளியின் 4 வாக்குச்சாவடிகளில் 2,000-க்கும் மேற்பட்டோர் வாக்க ளிக்கத் தகுதி பெற்றிருந்தும் வருகை குறைவாக இருந்தது.

இவிஎம் கோளாறு

109-ஆவது வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும், புக்கத்துறையிலும் இயந்திரமும் பழுதடைந்ததால் முறையே வாக்குப்

பதிவு பாதிக்கப்பட்டது; புக்கத்துறையில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. எலப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி 157-ஆவது வாக்குச்சாவடியில் சிசிடிவி கோளாறால் சுமார் 30 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. தண்டரை புதுச்சேரி 55-ஆவது வாக்குச்சாவடியில் விசில் சின்னத்துக்கு நேரான பொத்தானில் கருப்பு மை போன்ற அடையாளம் இருந்ததாகப் புகார் எழுந்து, சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு வாக்குப்பதிவு தொடர்ந்தது.

மிரட்டல் புகார்

பழமந்தூரில் செய்தியாளர்களை திமுக கிளைச் செயலாளர் ஒருவர் மிரட்டியதாகப் புகார் எழுந்து, காவல்துறையினர் அவரை வெளியேற்றினர். பள்ளிப்பேட்டையில் அதிமுகதுண்டுடன் வந்த எம்ஜிஆர் மன்றக் கிளைச் செயலாளர் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டு, துண்டை அகற்றிய பின்னர் வாக்களித்தார்; செல்போனை

யும் ஒப்படைத்தார். மேலவளம்பேட்டை யில் 85 வயது மூதாட்டி கம்பை ஊன்றியபடி வந்து வாக்களித்தார்.

தாராபுரம்

தாராபுரம் (தனி) தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக இருந்தாலும் ஆர்வம் குறைந்தது. வீராச்சிமங்கலம், மதுக்கம்பாளையம் பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள 108-ஆவது வாக்குச்சாவடியில் காலை 9.45 மணி வரை 42 பேர் மட்டுமே வாக்களித்தனர். கொட்டாப்புளிப்பாளையத்தில் இயந்திரக் கோளாறால் சுமார் 1.5 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ப. லட்சுமணன் தேர்பட்டியிலும், தவெக வேட்பாளர் சத்தியபாமா மதுக்கம்பாளையத்திலும், அதிமுக வேட்பாளர் பானுமதி வீராச்சமங்கலத்தி லும், திமுக வேட்பாளர் சுகன்யா தளவாய்பட்டினத்திலும் வாக்களித்தனர்.வீராச்சிமங்கலத்தில் தவெக டோக்கன் விநியோகம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. புஞ்சை தலையூர்,நஞ்சை தலையூர் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்தன. கள்ளிவலசு பூத் எண் 59-லும் இயந்திரக் கோளாறால்தாமதம் ஏற்பட்டது.

விசிலுக்கு வாக்கு சேகரித்த தேர்தல் அலுவலர் மாற்றம்

கொளிஞ்சிவாடி 137-ஆவது வாக்குச்சாவடியில் மூதாட்டியிடம் விசில் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு மூன்று முறை கூறிய அலுவலர் தங்கமணி மீது புகார் எழுந்தது. விசாரணையில் தவறு உறுதி செய்யப்பட்டதால் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ராஜம்மாள் நியமிக்கப்பட்டார். தாராபுரத்தில் 87 வயது முஸ்லிம் பெண்ணும், கோனேரிப்பட்டியில் 87 வயது வீரத்தாள் என்ற மூதாட்டியும் ஊன்றுகோலுடன் வந்து வாக்களித்தனர்.

தட்டாஞ்சாவடி: புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் காலை முதலே நீண்ட வரிசையில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். சுப்பையா நகரில் சுமார் 30 தெருக்களில் கை சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுச் சீட்டுகள் கிடந்தன. இதுதொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து காங்கிரஸ் பிரமுகர் தினேஷ் (28) என்பவரைத் தேடி வருகின்றனர்.மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அக்டோபர் 9 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.