மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : இன்று வாக்கு எண்ணிக்கை
8 Oct 2026, 11:07 pm
<p><strong>மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : இன்று வாக்கு எண்ணிக்கை</strong></p><p>சென்னை, அக். 8 -மதுராந்தகம், தாராபுரம் தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக். 9) நடைபெறுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 6) அன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மதுராந்தகம் தொகுதிக்கு ஆத்தூரில் உள்ள சமூகமேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்திலும்,மதுராந்தகம் தொகுதிக்கு திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும் நிலையல், முதலில் அஞ்சல் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்களைக் கொண்ட மதுராந்தகம் தொகுதியில், 86.26 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அவை 14மேசைகளில் 21 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.2 லட்சத்து 23 ஆயிரத்து 306 வாக்காளர்களைக் கொண்ட தாராபுரம் தொகுதியில், 80.25 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ள நிலையில், அவை 14 மேசைகளில்23 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.மதுராந்தகத்தில் பி. சுகந்தி (சிபிஎம்), மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), ஜானகிராமன் (நா.த.க.) ஆகியோர் முக்கியவேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இதேபோல தாராபுரத்தில் ப. லட்சுமணன் (சிபிஐ), சத்தியபாமா (தவெக),சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), கார்த்திகா (நா.த.க.) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.</p>
