வெல்ல வேண்டியது யார்?
5 Oct 2026, 8:37 pm

வெல்ல வேண்டியது யார்?

மதுராந்தகம், தாராபுரம் சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாயன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ இடைத் தேர்தல்கள் நடந்திருந்தாலும், இந்த இருதொகுதிகளுக்கான இடைத் தேர்தல் என்பது முற்றிலும் வித்தியாசமான சூழலில் நடைபெறுகிறது.

2026 தமிழக சட்டப் பேரவை தேர்தல் முடிந்தஅடுத்த நான்கு மாதத்திலேயே இந்த இருதொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் இயல்பாக, இயற்கையாகவந்த ஒன்றல்ல. மாறாக, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் வகையில் நடந்த குதிரை பேரத்தின் காரணமாக திணிக்கப்பட்ட தேர்தல் ஆகும். மதுராந்தகம் மற்றும்தாராபுரத்தில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவிற்குதாவினார்கள். இதேபோல வேறு சிலரும் தாவியுள்ளனர்.

நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளின் காரணமாக அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை.வழக்கு முடிந்தவுடன் அந்தத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில்எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கட்சித் தாவல் மூலம் பெரும்பான்மையை உருவாக்குவதற்காக நடைபெற்ற பேரத்தின் காரணமாகவே இந்தத் தேர்தல் வாக்காளர்களின் மீது திணிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவு.

இந்த இரு தொகுதிகளிலும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து களம் காண்கின்றன. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் பா.சுகந்தியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் பி.லட்சுமணனும் போட்டியிடுகின்றனர். இடதுசாரிக் கட்சிகள் தங்களுக்கே உரிய எளிமையோடும், அதே நேரத்தில்அறம்சார்ந்த வலிமையோடும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

மக்களிடம் சென்று விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை, சாதிய ஒடுக்குமுறை, பாலின பாகுபாடு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லிவாக்குக் கேட்டது இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே. ஏனைய கட்சிகள் தங்கள் தலைமையை மட்டுமேபரப்புரையில் முன்னிறுத்தினர். மாறாக, இடதுசாரிக் கட்சித் தோழர்கள் தங்களது தத்துவத்தை முன்வைத்தனர்.

சண்டைக்களமாகவும், சவடால் மடமாகவும், தனிமனித துதிபாடும் கூடமாகவும் மாற்றப்பட்டுள்ள சட்டப் பேரவைக்கு கம்யூனிஸ்ட்டுகள் கூடுதலான எண்ணிக்கையில் செல்ல வேண்டியதன் அவசியத்தை இடதுசாரிக் கட்சித் தோழர்கள் எடுத்துரைத்தனர்.

நான்கு திசைகளிலிருந்தும் பணம் வெள்ளமாக பாய்ந்த நிலையிலும், பற்றி எரியும் மூங்கில்காட்டிடையே புல்லாங்குழலாக கொள்கை கீதம்இசைத்து கம்யூனிஸ்ட்டுகள் கொள்கை வைராக்கியத்துடன் இந்த தேர்தல் களத்தைச் சந்தித்தார்கள்.இந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது மக்களாட்சி மாண்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவும்.