மதுராந்தகம் அருகே கார் கவிழ்ந்து விபத்து - கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு!
29 Aug 2026, 10:56 am

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில், தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் 7 மாணவர்கள், புதுச்சேரிக்குச் சென்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சென்னை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்துச் சிதறியது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 7 மாணவர்களும் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு 4 பேரையும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 3 பேரையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, மதுராந்தகம் மருத்துவமனையில் பியூட்டரின் (22) மற்றும் தீபக் (19) ஆகிய இருவரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ராஜ் பிரசாத் (19) என்பவரும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மற்ற 4 மாணவர்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.