தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுராந்தகம் களமும் இடதுசாரிகள் குரலும் - ஆர்.பத்ரி

29 Sept 2026, 9:10 pm
மதுராந்தகம் களமும் இடதுசாரிகள் குரலும் - ஆர்.பத்ரி

மதுராந்தகம் களமும் இடதுசாரிகள் குரலும் - ஆர்.பத்ரி

மதுராந்த கம், தாராபுரம் இடைத்தேர் தல் களத்தில் ஆளும் கட்சியும் ஏற்கெனவே ஆண்ட கட்சிகளும் எதிரும் புதிருமாகத் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக்கொண் டிருக்கின்றன. தேர்தல் பரப்புரைஎன்ற பெயரால் அரசியலற்றஉரையாடல்கள் அரங்கேறு கின்றன.அதிமுகவில் வெற்றி பெற்று, சிறிது காலத்திலேயே ஆளும் கட்சக்குத் தாவிய அதே வேட்பாளரை தவெக களத்தில் நிறுத்தி யிருக்கிறது. “சட்டப்படி இது சரியே; இதை எப்படிக் குதிரை பேரம் என்றுசொல்ல முடியும்?” என்று ஆளும்கட்சியும் முதல்வரும் ஒரு சொத்தையான வாதத்தை முன்வைக் கிறார்கள். ஒருவகையில் சட்டப்படி சரியே என்று வைத்துக்கொண்டா லும், தார்மீக ரீதியாக இது பெரியஅரசியல் பிழை. மக்கள் அளித்ததீர்ப்பைத் துச்சமெனத் தூக்கிப் போட்டுவிட்டு, கடந்த தேர்தலில் ஒரு சின்னத்தில் நின்ற அதே வேட்பாளர்இடைத்தேர்தலில் வேறு சின்னத்தில் நிற்பதை மக்கள் விரும்பவில்லை; அதனால் மக்களிடையே அதிருப்தி உருவாகியிருக் கிறது.

இரட்டைக் குதிரைச் சவாரி

அதனால்தான் பொதுத் தேர்தலில் பிரதான சாலைகளிலும் வராதமுதல்வர் விஜய் அவர்களின் பிரச்சார வாகனம், மதுராந்தகத்தின் நெரிசலான சந்து பொந்துகளிலும் நுழைந்து வலம் வருகிறது. ஆட்சிக்கு வந்துநான்கு மாதங்கள் கடந்த பின்னரும், தன் அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு வாக்குக் கேட்பதற்குப் பதிலாக,“திமுக எதிர்ப்பு” என்ற பழைய பல்லவியையே பாடியுள்ளார். முதல்வர் விஜய். ஒருபுறம் திமுகவைக் கடுமையாகத் தாக்குவது, மறுபுறம் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுக விசுவாசிகளின் வாக்குகளைக் கவரத் திட்டமிடுவது என இரண்டு குதிரைகளில் சவாரி செய்யமுயன்றுள்ளார்.

தார்மீக உரிமையை இழந்த திமுக

“குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் எங்களுக்கு வாக்களியுங்கள்” என்ற கோரிக்கையோடு திமுக நிற்கிறது. ஆனால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்சி மாறியதைக் கடுமையாக விமர்சிக்கும் இதே திமுகதான், கடந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு தனது ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களையும் எடப்பாடி பழனிச்சாமிக்குப் பின்னால் அணிவகுக்கத் தயாரானது என்பதை மதுராந்தகம் மக்களும் மறந்துவிடவில்லை. எனவே “குதிரைபேரம்” என்ற குற்றச்சாட்டை முன்வைப்ப தற்கான தார்மீக உரிமையை இழந்து தடுமாறி நிற்கிறது திமுக.தவெகவும் விஜய்யும் முன்வை க்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதிலேயே காலம் கடத்தும் திமுகவினரும்மக்கள் கோரிக்கைகளைப் பேசுவதாக இல்லை. போதாதற்கு, பெண்களைமீண்டும் மீண்டும் கொச்சைப் படுத்தும் விதத்திலேயே அவர்களதுபிரச்சார உரைகளும் அமை கின்றன. பிரதான எதிர்க்கட்சி என்ற பொறுப்பான பணியைப் புறக்கணித்துத் தனிமனித விமர்சனங் களில் மூழ்கிக் கிடக்கும் திமுகவை மதுராந்தகம் மக்கள் நம்பத் தயாராகஇல்லை.

“நீதி” கேட்கிறார் இவர்!

“நீதி கேட்டு வருகிறேன்; மதுராந்தகம் மக்களே, நீதியைத் தாருங்கள்” என வலம் வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. தம் கட்சியில் வென்ற எம்எல்ஏ ஆளும் கட்சிக்குத்தாவியதற்குத் தக்க பாடம் புகட்ட வேண்டுமெனில், மீண்டும் அதிமுகவுக்கே வாக்களியுங்கள் என்கிறார். ஆனால் இன்று நீதி கேட்கும் இதே எடப்பாடி பழனிச்சாமிதான், அன்று மக்கள்அளித்த தீர்ப்புக்குஎதிராகத் தன் அரை நூற்றாண்டுக் கால “அரசியல் எதிரியோடு” கைகொடுக்கத் தயாரானார் என்பதையும் மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். மேலும், மாநில உரிமைகளுக்கும் மதச்சார்பின்மை க்கும் விரோதமாகச் செயல்படும் பாஜகவுக்குப் பல்லக்குத் தூக்கிக் கொண்டே இருப்பதால், பொதுத்தேர்தலைப் போலவே இடைத் தேர்தலிலும் அதிமுக மக்களின் கடுமையான கேள்விகளை எதிர்கொள்கிறது.

“நாங்க என்னதான் பண்றது?” - மக்களின் குரல்

இத்தகைய நிலையில்தான் மக்களுக்காகப் போராடும் இடதுசாரிகள் களத்தில் நிற்கிறோம். மதுராந்தகம் தொகுதிகளில் வாக்குச் சேகரிக்கச் செல்லும் இடங்களிலெல்லாம் வேட்பாளர் தோழர் சுகந்தியிடமும் கட்சித் தோழர்களிடமும் மக்கள் ஏராளமான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்:“மதுராந்தகத்திலிருந்து ஆயிரக்கணக்கான பேர் செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் வேலைக்குப் போறாங்க சார். ஆனா எங்க ஊருக்கு முறையான ரயில் வசதி இல்ல.நிறைய ரயில் எங்க ஊரைக் கடந்து போனாலும் ஒன்னு ரெண்டுதான் நிக்குது. நீங்க ஜெயிச்சு வந்தா அதைச்செஞ்சு கொடுங்க.”“எங்க ஊருக்கு மேற்கே விரிஞ்சு கிடக்கிற மதுராந்தகம் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாம கிடக்குது.விவசாயத்துக்கும் மக்க

ளுக்கும் பயன்படல. ஆனா கோடிக்கணக்குல செலவு செஞ்சு தூர் வாரினோம்னு கணக்கு சொல்றாங்க. அந்தப் பணமெல்லாம் எங்க போச்சுன்னு தெரியலீங்களே.”“செங்கல்பட்டு மாவட்டம் பிரதான தொழில் மண்டலம்னு சொல்றாங்க. மறைமலை நகர், பரனூர், ஒரகடம்னுஅங்கெல்லாம் முதலீடும் தொழிற்சாலையும் வருது. ஆனா எங்க ஊரிலும் சுத்துவட்டாரத்திலும் ஒண்ணும் வரல.படிச்சு முடிச்சுட்டு வேலையில்லாத பசங்க ரயில்லயும் பஸ்ல யும் ஏறி வெளியூருக்குத்தான் போறாங்க. எங்க ஊருக்கு எப்ப சார் முதலீடும்வேலைவாய்ப்பும் கிடைக்கும்?”“இந்த மாவட்டம் பெரும்பாலும் விவசாயத்தை நம்பித்தான் இருக்கு. விவசாயிகளோட கோரிக்கையை அரசாங்கங்கள் காதுகொடுத்துக் கேட்கிறதாத் தெரியல. இப்போ ஊரக வேலைத் திட்டத்தையும் மொத்தமா முடக்கிட்டாங்க. நாங்க வாழ்றதா, செத்துப் போறதான்னு தெரியாம தவிக்கிறோம்.”

“ஊரு முழுசும் குண்டும் குழியுமா சாலை, சரியான மருத்துவ வசதி இல்ல, சுகாதார வசதி இல்ல. இதைப் பத்திப் பேசாம, சரி செஞ்சு தர்றோம்னு சொல்லாம, சண்டை போட்டுக்கிட்டே ஓட்டு கேட்க வராங்க ளே, நாங்க என்னதான் பண்றது?”இவை மதுராந்தகம் வாக்கா ளர்கள் மனம் வெதும்பி வெளிப்படுத்தும் வார்த்தைகள். இக்கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் வேட்பாளரி டமும் தோழர்களிடமும் பட்டிய லிடும் மக்கள், ஒரு மாற்றத்தைத் தேடுவதைஉணர முடிகிறது.

ஏரி காத்த ராமரும் ஊழல் வெள்ளமும்

மதுராந்தகம் ஏரியில் உடைப்பு ஏற்படும் போதெல்லாம் வெள்ளம்ஊருக்குள் வராமல் தடுத்ததாகமக்களால் நம்பப்படும் கோதண்ட ராமர், “ஏரி காத்த ராமராக” ஊரின் முகப்பில் வீற்றிருக்கிறார். இப்போது இடைத்தேர்தல் வெற்றிக்காக வெள்ளமாய்ப் பாயும் பண மூட்டைகளோடு முதலாளித்துவ அரசியல் கட்சிகள் தொகுதியில் வலம்வருகின்றன. வெள்ளத்தை ராமர் தடுத்தார் என்பது நம்பிக்கை; ஊழல் வெள்ளத்தைக் கம்யூனிஸ்டுகள் தடுப்பார்கள் என்பது நிதர்ச னம்.

மாற்றத்துக்காக ஒரு வாக்கு

இதுவரை கட்சியைப் பார்த்தும், பிடித்த தலைவர்களுக்காகவும் வாக்களித்து ஏமாந்தது போதும். இனி மாற்றத்திற்காக வாக்களிப்போம்; தொகுதி வளர்ச்சிக் காக வாக்களிப்போம். நிறுத்தப் பட்டிருக்கும் வேட்பாளர்களில் யார் சிறந்தவர் எனச் சீர்தூக்கிப் பார்த்து வாக்களிப்போம் என்ற முழக்கத்தோடு தொகுதி முழுவதும் வலம் வருகிறார்கள்இடதுசாரித் தோழர்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.