தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டப்பேரவையில் விளிம்புநிலை மக்களின் குரலாக சுகந்தி செயல்படுவார் மதுராந்தகத்தில் பெ.சண்முகம் பிரச்சாரம்

24 Sept 2026, 9:54 pm
சட்டப்பேரவையில் விளிம்புநிலை மக்களின் குரலாக சுகந்தி செயல்படுவார் மதுராந்தகத்தில் பெ.சண்முகம் பிரச்சாரம்

சட்டப்பேரவையில் விளிம்புநிலை மக்களின் குரலாக சுகந்தி செயல்படுவார்

மதுராந்தகத்தில் பெ.சண்முகம் பிரச்சாரம்

மதுராந்தகம், செப். 23 -மதுராந்தகம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி, சட்டப்பேரவையில் விளிம்புநிலை மக்களின் உண்மையான பிரதிநிதியாகச் செயல்படுவார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட அண்டவாக்கம், சித்தாலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் புதனன்று (செப்.23) சுகந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது அவர் இதைத் தெரிவித்தார்.

“நான்கு பேர் இருந்தாலும் மகத்தான மாற்றம்”

“இரண்டு எம்எல்ஏக்கள் போய் என்ன செய்ய முடியும்?” என்ற கேள்விக்கு வரலாறே பதிலளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். காஷ்மீரில் ஒரே ஒரு சிபிஎம் எம்எல்ஏவாக இருந்த யூசுப் தாரிகாமி, சிறுமி ஆசிபாவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிகளுக்குச் சட்டப்பூர்வத் தண்டனை பெற்றுத் தந்தார் என்றும், வாச்சாத்தி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை சட்டமன்றத்தில் ஒற்றைக் குரலாக எழுப்பியவர் சிபிஎம் உறுப்பினர் தம்புசாமி என்றும் அவர் நினைவுகூர்ந்தார். தற்போது சட்டமன்றத்தில் நான்கே நான்கு கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இருந்தாலும், விவசாயிகள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழி லாளர்கள், பெண்கள், குழந்

தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக உண்மையான குரல் கொடுத்தது இடதுசாரிகள் மட்டுமே என்றார். நாடாளுமன்றத்திலும் இதே பாணியில் தமிழக நலன் தொடர்பான எந்தப்பிரச்சனையாக இருந்தாலும், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் குரல் கொடுத்து வருபவர் நாடாளுமன்றஉறுப்பினர்கள் வெங்கடேசன், சச்சிதானந்தம் போன்றவர் கள்தான் என்றும், எத்தனை பேர் சட்டமன்றத்தில் இருக்கிறோம் என்பதல்ல, யாருக்காகப் பேசுகிறோம் என்பதே முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

2004-ல் 61 எம்.பிக்கள் ஆட்சியின்றி சட்டங்கள்

2004-இல் நாடாளுமன்றத்தில் 61 இடதுசாரி உறுப்பினர்கள் இருந்தபோதும் அமைச்சர் பதவி கேட்காமல், மக்கள் நலச் சட்டங்களை இயற்றுமாறு மட்டுமே கோரியதால்தான் கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டம், வன உரிமைச் சட்டம் 2006, தகவல் அறியும் உரிமைச் சட்டம்ஆகியவை வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். ஆட்சியில் இல்லாமலே கோடிக்கணக்கான மக்களின் நலனைப்பாதுகாக்கும் சட்டங்களை வென்றெடுத்த வரலாறு இடதுசாரிகளுக்கு உண்டு என்றார்.

தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான போக்கு

தலைமைத் தேர்தல் ஆணையம் தன்னிச்சை யாகச் செயல்பட்டு, சிறுபான்மை இஸ்லாமிய, பட்டியல் சமூக, பழங்குடி மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் சுமார் 15 கோடி வாக்காளர்களின் பெயர்களை பட்டியலிலிருந்துநீக்கியிருப்பது கண்டிக்கத் தக்கது என அவர் தெரிவித் தார். பாஜக ‘ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே ஆட்சி’ என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களையும் தன் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவர சட்ட நெறிமுறைகளை மிதித்து செயல்படுவதாகவும், தேர்தல்ஆணையத்தின் இந்த மோசமான செயல்பாடு அதன்ஒரு உதாரணம் எனவும் அவர் விமர்சித்தார். இந்த ஜனநாயகப் படுகொலைக்குத் துணைபோகும் பாஜக-அதிமுகதவெக அணிகளை மக்கள் முற்றிலுமாகத் தோற்கடிக்க வேண்டும் எனவும், ஒரு கட்சி சார்பில் வெற்றிபெற்ற பின்கட்சி தாவும் போக்கு ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் எனவும் எச்சரித்தார்.

தவெக ஆட்சிக்கு வலியுறுத்தல்

ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் ஆகியும், மந்திரி பதவியோ வேறு சலுகைகளோ கேட்காமல் மக்கள் நலன்சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மட்டுமே தவெக அரசை வற்புறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். ஆளும் திமுகவும் தவெகவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் சட்ட மன்றத்தைத் தனிப்பட்ட மோதல் களமாக்காமல் ஆக்க ப்பூர்வமாகப் பயன்படுத்தவேண்டும் எனவும், சட்டமன்ற நடவடிக்கைகள் மக்களுக்குத் தெரியும் வகையில் நேரடி ஒளிபரப்பு தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“இதுவரை பெறாத எம்எல்ஏ”

மதுராந்தகத்தில் இருந்துசுகந்தியும், தாராபுரத்தி லிருந்து லட்சுமணனும் சட்டப்பேரவைக்குச் சென்றால் உழைக்கும் மக்களின் குரல் இன்னும் வலுவாக ஒலிக்கும் என்றார். வாழ்நாள் முழுவதும்போராட்டமே வாழ்க்கையாகக் கொண்ட சுகந்தியை வெற்றிபெறச் செய்தால், “இதுவரை இப்படி ஒரு உறுப்பினரை நாம் பெறாமல் போனோமே” என தொகுதி மக்கள்வியக்கும் அளவுக்கு அவர் சிறந்த சட்டமன்ற உறுப்பினராக செயல்படுவார் என்று சண்முகம் தெரிவித்தார்.மதுராந்தகம் மக்களின் கண்ணீரைத் துடைக்க தோழர் சுகந்திக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரச் சின்னத்தில்வாக்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா, தொகுதிப் பொறுப் பாளர் சேகுவேரா தாஸ் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.